‘கொரோனாவா, எங்ககிட்ட தான் இது இருக்கே’ வைரலாகும் ஹிப்ஹாப் தமிழா ஆதியின் Insta பதிவு!

பிரபல இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா ஆதியின் கொரோனா வைரஸ் குறித்த பதிவு இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர், இயக்குனர், நடிகர் என பன்முக திறமை கொண்டவர் ஹிப் ஹாப் தமிழா ஆதி. இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

இந்நிலையில், இந்தியா உட்பட உலகம் முழுவதும் பீதியை கிளப்பி வரும் விஷயம் என்றால் அது கொரோனா வைரஸ் தான். இந்நிலையில் கொரோனா குறித்து ஹிப் ஹாப் தமிழா ஆதி பதிவிட்ட கருத்து இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

ஆதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாஸ்க் அணிந்தபடி புகைபடத்தை பதிவிட்டு அதனுடன், “ஷூட்டிங் ஸ்பாட்டில் காற்று மாசுக்காக மாஸ்க் அணிந்தால் கூட கொரோனாவா என்று பலரும் எண்ணுகின்றனர். எங்க கிட்ட நிலவேம்பு கசாயம் இருக்கு, சோ நோ கொரானா” என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு பலரையும் கவர்ந்துள்ளது.

View this post on Instagram

When you go to shoot in windy areas and you wear a mask for the dust and everyone thinks you have corona 😑 Corona ku no cos we got nilavembu bro 🤷🏻‍♂️😛😄

A post shared by Hiphop Tamizha (@hiphoptamizha) on

What do you think?

பேராசிரியர் காலமான செய்தியறிந்து வருத்தமுற்றேன் – டிடிவி டிவிட்

‘பேராசிரியர் பெருந்தகையே எனக்கு பெரியப்பா’ ஸ்டாலின் எழுதிய உருக்கமான கடிதம்!