சரித்திர நாயகன் ஸ்டாலின்..! 3 ஆண்டு ஆட்சியில்..?
ஸ்டாலின் என்றால் செயல் என நிரூபித்து காட்டியுள்ளதாக திமுக ஆட்சியின் 3 ஆண்டு கால சாதனைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
சட்டமன்ற தேர்தல் :
கடந்த 2021-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அமோக வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்குப் பின் ஆட்சியில் அமர்ந்தது.
அந்த ஆண்டு மே 7-ம் தேதி முதல் முறையாக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றார்.
வாக்குறுதி நிறைவேற்றம் :
அதன் பின்னர், திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்த வாக்குறுதிகள் நிறைவேற்றும் பணி தொடங்கியது.
அந்த வகையில், கடந்த 3 ஆண்டுகளில் 25-க்கும் மேற்பட்ட முக்கியமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டது.
அதாவது, 1 கோடியே 15 லட்சம் பெண்களுக்கு மாதந்தோறும் 1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில், திமுக ஆட்சி பெறுப்பேற்று 3 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து, சென்னை மெரினாவில் உள்ள அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள காணொளியில், இது சொல்லாட்சி அல்ல, செயலாட்சி என்றும், மக்களின் நன்றி கலந்த வாழ்த்தும், புன்னகை அரும்பும் முகங்களும் தான் இன்னும் உழைக்கத் தூண்டுவதாக பதிவிட்டுள்ளார்.
சரித்திர நாயகன் :
சமூகநீதிக்கான சரித்திர நாயகர் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற மூன்றாண்டுகளில் படைத்துள்ள சாதனைகள் உலகப் புகழ் பாடும் என திமுக பெருமிதம் தெரிவித்துள்ளது.
திமுக சாதனை :
* ஆவின் பால் லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு.
* திருக்குறளை தேசிய நூலாக மாற்றம்.
* பெட்ரோல் 5ரூபாய், டீசல் 4ரூபாய்க்கு குறைப்பு.
* சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம்.
* இந்து ஆலயங்களை சீரமைக்க ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு.
* தேவாலயங்களைச் சீரமைக்க ரூ.200 கோடி ஒதுக்கீடு.
* தொழிலாளர்களுக்குப் பழைய ஓய்வூதியத் திட்டம்.
* விவசாயத்துக்கு தனி பட்ஜெட் தாக்கல்.
* மகளிர் 1000 ரூபாய் உதவிதொகைதிட்டம்.
* மகளிர் இலவச பேருந்து விடியல் பயணம்.
* மாணவர்களுக்கான நாளைய முதல்வன் திட்டம்.
* எழில்மிகு எழில்நகர் மேம்பாலம் திட்டம்.
உட்பட பல்வேறு திட்டங்களை திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டு இருப்பதாக ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
மேலும்.., நாங்கள் சொன்னதை செய்வோம், சொல்லாததையோம் செய்வோம் என்ற நோக்கில் திமுக ஆட்சி செயல்பட்டு இருப்பதாகவும்.., இன்னும் பல்வேறு திட்டங்களை திமுக நிறைவேற்ற இருப்பதாகவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும் கடந்த 3 ஆண்டு ஆட்சியில் தங்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து கொடுத்த திமுக ஆட்சிக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கும பொதுமக்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..