இந்தியா கிரிக்கெட் அணி தற்போது வங்கதேச சுற்றுப்பயணம் சென்றுள்ளது. மூன்று ஒரு நாள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளை இந்த தொடரில் நேற்று இரண்டாம் ஓடிஐ போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
பந்து வீச்சுடன் இன்னிங்க்ஸை தொடங்கிய இந்திய அணி ஆட்டத்தின் தொடக்கத்திலேயே வங்கதேச பேட்ஸ்மேன் அனாமுல் ஹக் (11), கேப்டன் லிட்டன் தாஸ் (7) வெளியேறினர். அடுத்தடுத்து விக்கெட்களை வீழ்த்தி இந்தியா பந்து வீச்சு அசத்தியது.இதனால் இந்தியா பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாத வங்கதேச அணி 69 ரன்னுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து திணறியது. இந்நிலையில், முதல் ஒரு நாள் போட்டியில் அசத்திய மெஹதி ஹசன் மற்றும் மொஹம்மதுல்லா கூட்டணி வங்கதேசத்தை வீழ்ச்சியில் இருந்து மீட்டது, மிகவும் சிறப்பாக ஆடிய இந்த பார்ட்னெர்ஷிப் 148 ரன் சேர்த்த போது இந்தியா வேக பந்துவீச்சாளர் உம்ரன் மாலிக் பந்தில் மொஹம்மதுல்லா 77 ரன்களில் ஆட்டமிழக்க ஒரு புறம் மெஹதி ஹசன் தன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பந்துகளை சிக்ஸர் மற்றும் ஃபோர்களுக்கு பறக்கவிட்டு தனது முதல் சதத்தை பதிவு செய்தார். ஆட்டத்தின் இறுதியில் இந்தியா பந்துவீச்சாளர்களில் வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட் மற்றும் சிராஜ், உம்ரன் மாலிக் தலா 2 விக்கெட்களையும் எடுத்தனர். 50 ஓவர்கள் முடிவில் 271 ரன்களை எடுத்தது. கேப்டன் ரோஹித் சர்மாவின் கட்ட விரலில் காயம் காரணமாக ஆட்டத்தின் பாதியில் வெளியே சென்றார்.
வெற்றிக்கு 272 ரன்கள் என்ற இலக்கோடு களம் இறங்கிய இந்தியா அணி தொடக்கத்திலேயே தனது தொடக்க ஆட்டக்காரக்கலை இழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தது. விராட் கோலி தவான் போன்ற அனுபவமிக்க வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற ராஹுல் மீண்டும் சொதப்பினார். பின்னர் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் அக்சர் படேல் கூட்டணி இந்தியாவின் விக்கெட் சரிவாய் தடுத்து நிதானமாக ஆடினார். தனக்கு கிடைத்த வாய்ப்புகளிலெல்லாம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷ்ரேயாஸ் ஐயர் மீண்டும் அரை சதம் கடந்தார். பின்னர் அக்சர் படேலும் அரை சதம் கடக்க இந்தியா சீராக இலக்கை தொரத்தியது. பின்னர் வங்கதேச அணியின் நட்சத்திர வீரர் சாகிப் அல் ஹாசனின் சிறப்பான பந்து வீச்சில் இந்தியா அணி மீண்டும் விக்கெட்களை இழந்தது. ஸ்ரேயாஸ் ஐயர் 82 ரன்களில் தனது விஸ்க்ட்டை இலக்க தெடர்ந்து விக்கெட்கள் சரிந்தது பின்னர் இறுதியில் கையில் கட்டுடன் களம் இறங்கிய இந்தியா கேப்டன் ரோஹித் ஷாம்ரா ருத்திரத்தாண்டவ ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
கடைசியில் ஒரு பந்துக்கு 6 ரன்கள் என்ற நிலையில் இந்தியா தோல்வியை தழுவி ஒரு நாள் தொடரை இழந்தது. ஆட்டத்தை கிட்டத்தட்ட இந்தியாவின் பக்கம் திருப்பிய ரோஹித் 51 ரன், 28 பந்து, 5 சிக்சர், 3 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். வங்கதேச சார்பில் பாதத் 3, மெஹிதி, சாகிப் தலா 2 விக்கெட் கைப்பற்றினர். இந்த தொல்வயின் மூலம் இந்தியா அணி வங்கதேசதிற்கு எதிரான ஒரு நாள் தொடரை இழந்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.