“கோட்டையில் ஓட்டை” ஒரே கேள்வியில் எடப்பாடியை ஆப் செய்த தினகரன்..!!
அதிமுகவின் முக்குலத்தோர் வாக்கு வங்கியில் விழுந்த ஓட்டைகளை சரி செய்ய எடப்பாடி பழனிசாமி தீவிரம் காட்டி வருகிறார்..
முக்குலத்தோரின் வாக்குகளை பெறுவதற்காக இந்த 2 வருட காலத்தில் சட்டமன்றம் உட்பட அனைத்து விஷயங்களிலும் தனக்கு அடுத்த படியான இடத்தை ஆர்பி உதயகுமாருக்கு ஒதுக்கியுள்ளார்.. எடப்பாடி பழனிசாமி..
ஆர்பி உதயகுமார் மட்டுமின்றி செல்லூர் ராஜு ராஜன் செல்லப்பா போன்றவருக்கு கட்சியில் தரப்படும் முக்கியத்துவமாக திண்டுக்கல் சீனிவாசன்.., நத்தம் விசுவநாதன் முனுசாமி போன்றவரை முன்னிலை படுத்த சி.விஜயபாஸ்கர், காமராஜ், ஓ.எஸ்.மணியன் போன்றவரை தாங்கி பிடிப்பதாகட்டும் முக்குலத்து வாக்குகள் எடப்பாடியினரால் அவ்வளவு சுலபமாக பெறமுடியாது என்பதை நேற்றைய தாக்குதலில் தெரியவந்துள்ளது..
சசிகலா :
மற்றொரு பக்கம் சசிகலா, தினகரன், ஓ.பன்னீர் செல்வம், மூன்றுபேரும் கூட்டணி வைத்துக் கொண்டுள்ளார்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.., தேவர் ஜெயந்தி என்றாலே வழக்கமாக இவர்கள் மூவருக்கும் தென்மண்டலத்தில் ஆதரவும், வரவேற்பும் கிடைப்பது இயல்பு என்றாலும் இவர்களிடம் எந்த வித்தியாசமும் இல்லை..
சசிகலாவை பொறுத்த வரையில்.., இந்த இரண்டு வருட காலமாகவே.., ஒன்றிணைந்து அதிமுகவிற்கு முயன்று கொண்டிருந்தனர். வழக்கமாக அதிரடி அரசியலை கையாளும் சசிகலா சிறைவாசத்திற்கு பின் அடவாடியை விட்டுவிட்டு அமைதி அரசியலை கையில் எடுத்துள்ளார்..
என்ன பண்ணாலும் எடப்பாடி மாறப்போவதில்லை என்பதையை தாமதமாக புரிந்து கொண்டுள்ளார்..
அடாவடி அரசியல் :
கொஞ்சம் நாள் பொறுமையாக இருந்த சசிகலா தற்போது எடப்பாடிக்கு நேரடியாக தொந்தரவு கொடுக்க ஆரமித்துள்ளார். இரண்டு வருடங்களாக பசும்பொன்னிற்கு வருகை தராத எடப்பாடி, நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு பசும்பொன் வந்துள்ளார்.
முதல் முறையாக சசிகலாவிற்கு இந்த பேச்சு தான் எடப்படிக்கு எதிரான அரசியலை முன் நிறுத்தியுள்ளது, சில சுற்றுபயணம் செல்ல இருப்பதாகவும் சசிகலாவும் தெரிவித்துள்ளார்.
யாரை எதிர்க்க இந்த சுற்று பயணம், எந்த மாவட்டத்தில் சுற்று பயணம், பாஜக கொடுத்த பூஸ்ட் தான் சசிகலாவின் இந்த புதுமுயற்சி என எடப்பாடி தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
தினகரன் :
டிடிவி தினகரனை பொறுத்தவரையில் பாஜகவுடன் கூட்டணி வைத்துக்கொள்ளப் போவது உறுதியாகிவிட்டது.., எடப்பாடி பாஜகவுடன் கூட்டணியில்லை என விலகி விட்ட பின் இன்னும் என பிரதமரை சந்தித்து இது பற்றி பேசாமல் அதிமுக கட்சி என திரிந்து கொண்டு இருக்கிறார்.
தமிழக மக்களுக்கு எதிரான அரசியல் திட்டங்கள் பற்றி விமர்சிக்கவேயில்லை.., எதையாவது கேட்டால் நான் பாஜகவுடன் கூட்டணியில் இல்லை என உளறி கொண்டு இருப்பார் எடப்பாடி, இதை தவிர அவருக்கு வேறு என்ன தெரிந்து விடப் போகிறது.
அதைவிட முக்கியமாக, ஓபிஎஸ், தினகரன், சசிகலா போன்ற முக்குலத்தோர் முகங்களை, கட்சியில் இருந்தே வெளிநடப்பு செய்யப்பட்டதால் தென்மண்டல மக்களை சமாதானம் செய்ய வேண்டிய பொறுப்பு எடப்பாடி பழனிசாமிக்கு உள்ளது என அரசியல் வட்டாரங்களில் தெரிவித்துள்ளனர்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..