ரேஷன் கடைகளுக்கு விடுமுறை…! தமிழக அரசு உத்தரவு…!
அனைத்து ரேஷன் கடைகளுக்கும் நாளை மறுநாள் விடுமுறை விடப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளுக்கும் நாளை மறுநாள் (ஜூலை 20ம் தேதி) விடுமுறை விடப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மகளிர் உரிமைத் தொகைத் திட்டப் பணிகளுக்காக ரேஷன் கடை பணியாளா்கள் வேலை செய்த நிலையில், அதற்கு ஈடாக விடுமுறை விடப்படுவதாக உணவுப் பொருள் வழங்கல், நுகா்வோர் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
மகளிா் உரிமைத் திட்டத்தின் கீழ், பயனாளிகளைத் தோ்வு செய்யும் பணி நடைபெற்றது. இந்த பணியை கடந்த ஆண்டு ஜூலை 23, ஆகஸ்ட் 4 ஆகிய விடுமுறை தினங்களில் ரேஷன் கடை பணியாளர்கள் மேற்கொண்டனர்.
2 நாள்கள் பணிக்காலத்தை ஈடுசெய்யும் வகையில், கடந்த ஜூன் 15-ந்தேதி ஒரு நாள் விடுப்பு வழங்கப்பட்ட நிலையில், இந்த மாதம் நாளை மறுநாள் விடுமுறை விட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..