இன்று நடைபெறும் இந்தியா சிமெண்ட்ஸின் 75வது ஆண்டின் பவள விழாவில் பங்கேற்க சென்னை வந்துள்ளார் உள்துறை அமைச்சர் அமித் ஷா. நேற்று திண்டுக்கல்லில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவிற்கு பிரதமர் மோடி வந்த நிலையில் அடுத்த நாளே அமித் ஷா வருகை தந்துள்ளது முக்கியத்துவமா கருதபடுகிறது
இந்தியாவின் முன்னணி நிறுவங்களின் ஒன்றான இந்தியன் சிமெண்ட்ஸ் தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் அந்நிறுவனம் சென்னை கலைவாணர் அரங்கத்தில் பவள விழாவை கொண்டாடுகிறது. இந்த விழாவில் பங்கு பெற பல முக்கிய அமைச்சர்கள் வந்துள்ளனர்.
இந்த விழாவில் பங்குபெற உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தங்கம் தென்னரசு மற்றும் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் எம்.எஸ் தோனி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இந்நிகழ்ச்சி முடிந்த பிறகு உள்துறை அமைச்சர் அமித்ஷா வை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் சந்திக்க உள்ளதாகவும் தகவல் வந்துள்ளது, எடப்பாடி பழனிசாமி இந்த விழாவிற்கு பங்கேற்காகத்தால் அமிட்ஷாவை சந்திக்க மாட்டார் என்று தெரிகிறது.