‘கெஜ்ரிவாலை பயங்கரவாதி என கூறியிருக்கக்கூடாது’ – அமித்ஷா ஒப்புதல்!

டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் தனது வியூகம் தோல்வியடைந்துவிட்டதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 62 தொகுதிகளை கைப்பற்றி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 7 தொகுதிகளில் வெற்றி பெற்ற பாஜக தற்போது வெறும் 8 சட்டமன்ற தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்றள்ளது.

இந்த தோல்வி பாஜக தலைவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில், இதுதொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷா கருத்து தெரிவித்துள்ளார். அதில், “தேர்தல் பரப்புரையின்போது ஷாஹின்பாக் எதிர்ப்பாளர்களை சுட்டுக் கொல்ல வேண்டும் என பாஜக தலைவர்கள் பேசியிருக்க கூடாது எனவும், அரவிந்த் கெஜ்ரிவாலை பயங்கரவாதி என பரப்புரையின் போது பாஜக தலைவர்கள் கூறியிருக்கக்கூடாது” என்றும் அமித்ஷா தெரிவித்துள்ளார்,

What do you think?

கடலூரில் மருத்துவக் கல்லூரி: தமிழக பட்ஜெட்டில் ஓ.பி.எஸ் அறிவிப்பு

கொரோனா வைரஸ் – நாளுக்கு நாள் அதிகரிக்கும் உயிரிழப்பு