பிரசவ நேரத்தில் பனிக்குடம் உடைந்தால் உண்டாகும் அறிகுறிகள் பற்றி தெரியுமா..?
பிரசவம் நெருங்கும் சமயத்தில் குழந்தை பிறப்பதற்கான அறிகுறிகள் ஒன்று தான் பனிக்குடம் உடைதல். அப்படி பனிக்குடம் உடைந்தால் என்ன செய்ய வேண்டும், என்ன அறிகுறிகள் இருக்கும் என்பதை பற்றி இந்த பதிவில் காண்போம்.
பனிக்குடம் என்பது நீர் நிறைந்திருக்கும் பகுதியாகும். தாயின் வயிற்றில் இருக்கும் கருப்பையில் நிறைந்திருக்கும் நீரில் தான் கரு உருவாகி வளர தொடங்கும். அந்த பகுதியில் இருக்கும் நீரை தான் பனிக்குட நீர் என சொல்கிறோம்.
புகைப்பிடித்தல், 2 அல்லது 3 வது வாரத்தில் பிறப்புறுப்பில் ரத்தக்கசிவு, சிறிய உறுப்பு, நோய்த்தொற்று, முன் பிரசவம் குறைப்பிரசவம் ஆகிய பிரச்சனைகளால் பனிக்குடமானது முன்கூட்டியே உடைவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.
பனிக்குடம் உடைந்தால் அதிலிருக்கும் திரவம் வெளியேற தொடங்கும். பனிக்குடம் எந்த அளவிற்கு உடைந்திருக்கிறது என்பதை வைத்து தான் திரவம் லீக் அளவி இருக்கும். ஆனால் திரவம் நிற்காமல் வரும்.
கர்பிணிகள் பனிக்குடம் உடைய போவதை ஒரு அழுத்தம் மூலம் உணரலாம். திரவம் வெளியாவதற்கு முன்பே அந்த அழுத்தத்தை உணர முடியும்.
பனிக்குடம் உடைந்து வெளியேறும் திரவத்தில் சிறுநீரில் வருவது போல எந்தவொரு வாடையும் இருக்காது. வாடை எதுவும் இல்லாத திரவம் வெளியேறும் எனில் அது பனிக்குடம் உடைந்துள்ளது என்பதை காட்டும்.
குழந்தையை சுற்றியுள்ள திரவம் உடனே உடையும்போது ஒரு வித சத்தம் கேட்பதாக கர்பிணிகள் கூறுகிறார்கள். இந்த சத்தம் கேட்ட உடனே திரவம் வெளியேறுவதை காணலாம்.
பிரசவ வலி நெருங்கும்போது ஹார்மோன் பிரசவ வலியை தூண்டும். அதனால் குடல் இயக்கம் சீராகி அடிக்கடி சிறுநீர் கழிக்க வழிசெய்யும். அடிக்கடி பாத்ரூம் செல்வதால் பனிக்குடம் உடைய போகிறது என்பதை புரிந்துக் கொள்ளலாம். மேலும் வயிற்றை சுற்றிலும் ஒருவித இறுக்கம் உண்டாகும்.
பனிக்குடம் உடைந்த சில நேரங்களிலே பிரசவ வலி ஏற்படக்கூடும். பனிக்குடம் உடைந்து உறுதியானால் உடனே மருத்துவரை அணுக வேண்டும் அதுவே குழந்தைக்கு நன்மையளிக்கும்.