மருத்துவ குணம் நிறைந்த கசகசா புலாவ் செய்யலாமா..!
சீரக சம்பா அரிசி – ஒரு கப்
பட்டை கிராம்பு ஏலக்காய் – தலா 2
சோம்பு – சிறிது
கசகசா – ஒரு டேபிள் ஸ்பூன்
முந்திரி -5
இஞ்சி பூண்டு விழுது- ஒரு டீஸ்பூன்
பச்சை மிளகாய்- 2
வெங்காயம் ஒன்று
எண்ணெய் – இரண்டு டேபிள் ஸ்பூன்
உப்பு –தேவைக்கு ஏற்ப
அரிசியை சுத்தம் செய்து கழுவி எடுத்து வைக்கவும்.
சிறிது சுடுநீரில் கசகசா மற்றும் முந்திரியை ஊற வைத்து அரைத்துக் கொள்ளவும்.
வெங்காயத்தை நறுக்கவும், பச்சை மிளகாயை இரண்டாய வெட்டிக் கொள்ளவும்.
ஒரு குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கறிவேப்பிலை, பட்டை கிராம்பு ஏலக்காய் ஆகியவற்றை போட்டு பொரித்து பின் பச்சை மிளகாய், வெங்காயம் போட்டு வதக்க வேண்டும்.
அனைத்தும் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்பின் அரைத்த கசகசா விழுதை சேர்த்து வதக்கவும்.
அனைத்தும் ஒன்றாக கொதித்ததும் உப்பு சேர்த்து அரிசியை போட்டு குக்கரை மூடி அடுப்பை மிதமாக வைத்து 10 நிமிடம் வேகவைத்து எடுக்க வேண்டும்.
அவ்வளவு தான் சூடான கசகசா புலாவ் தயார். இதனுடன் குருமா மற்றும் பச்சடி வைத்து சாப்பிடலாம்.