ஹாட் சம்மர் – சில் ஹவுஸ்..!!
அடிக்கும் வெயிலில் வெளியே சென்றால் தான் அனல் தாங்க முடியவில்லை என்று பார்த்தால்.., வீட்டில் இருந்தாலும் இதே பிரச்சனை தான் என்று புலம்புபவரா நீங்கள்..? இனி கவலை வேண்டாம். வீட்டை கூலாக வைக்க சில டிப்ஸ்.
* சீலிங் ஃபேனிற்கு பதிலாக.., டேபிள் ஃபேன் பயன்படுத்தலாம். சீலிங் ஃபேன் மேலேயுள்ள வெப்பக் காற்றை உள் இழுக்கும்.., டேபிள் ஃபேன் உள் இருக்கும் வெப்பக் காற்றை வெளியே அனுப்பும்.
* காலை 11 மணிக்கு மேல் .., வீட்டின் ஜன்னல்களில் ஒரு காட்டன் துணியை தண்ணீரில் நனைத்து தொங்க விடலாம்.
* அறையின் மூலையில் ஒரு பெரிய டப்பில் தண்ணீர் பிடித்து வைக்கலாம்.., இதனால் வெப்பக்காற்று தண்ணீரில் இறங்கிவிடும்.
* சூரிய வெளிச்சம் அதிகம் உள்ளப்பகுதியில் காட்டன் துணியை தண்ணீரில் நனைத்து தொங்க விடலாம்.
மேலும் இதுபோன்ற பல வீட்டுபராமரிப்பு பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..
-வெ.லோகேஸ்வரி.