‘பிரதமரின் கோரிக்கை’ தமிழகத்தில் 1 லட்சம் ஹோட்டல்கள் அடைப்பு!

பிரதமர் நரேந்திர மோடியின் கோரிக்கையை ஏற்று மார்ச் 22ஆம் தேதி தமிழகத்தில் உள்ள ஒரு லட்சம் ஹோட்டல்கள் அடைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் நேற்று மக்களிடம் தொலைக்காட்சி வாயிலாக உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “மார்ச் 22ஆம் தேதி காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் மக்கள் தங்களுக்குத் தாங்களே கட்டுப்பாடு விதித்துக் கொண்டு வீடுகளுக்குள் இருக்கவேண்டும். இது மக்கள் ஊரடங்கு உத்தரவு என்றும் மிக மிக அத்தியாவசிய தேவைகள் இருந்தால் மட்டும் தான் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டும்” என்றும் கோரிக்கை வைத்தார்.

பிரதமரின் இந்த கோரிக்கைக்கு பலரும் ஆதரவு தெரிவித்துவரும் நிலையில் தமிழ்நாடு ஹோட்டல் சங்கமும் ஆதரவு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பிரதமர் மோடியின் ஊரடங்கு உத்தரவுபடி வரும் ஞாயிற்றுக்கிழமை( மார்ச் 22) ஆண்டு முழுவதும் ஹோட்டல்களை மூடி வைக்க முடிவு செய்துள்ளோம். இதனால் தமிழகத்தில் சுமார் ஒரு லட்சம் ஹோட்டல்கள் இயங்காது. எங்கள் சங்கத்தின்கீழ், சென்னையில் மட்டும் சுமார் 40,000 ஹோட்டல்கள் இயங்குகின்றன. அவை அனைத்தும் மூடப்படும்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல, வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தமிழகம் முழுக்க நாளை மறுநாள் கடைகள் அடைக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

What do you think?

‘இன்றும் உயர்ந்தது தங்கத்தின் விலை’ ஒரு சவரன் இவ்ளோவா?

மத்திய பிரதேச முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் கமல்நாத்!