கடந்த 15ம் தேதி நெல்லையில் இருந்து ஓசூருக்கு சென்று கொண்டிருந்த லாரியை டிரைவர் பாலகிருஷ்ணன் ஓட்டி வந்துள்ளார். லாரி திண்டுக்கல் – கரூர் சாலையில் உள்ள காமாட்சிபுரம் அருகே வந்தபோது யுனேவா காரில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் தடுத்து நிறுத்தி டிரைவர் பாலகிருஷ்ணனை கட்டி போட்டு தாக்குதல் நடத்தி லாரியில் வைத்திருந்த ரூ 11 லட்சத்து 50,000 கொள்ளையடித்தனர்.
பின்னர் லாரியை வேடசந்தூர் அருகே உள்ள விடுதலைபட்டியில் விட்டு விட்டு சென்றனர். பாலகிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். ரூ.12 லட்சம் வழிப்பறி செய்தது தொடர்பாக தாடிக்கொம்பு போலீசார் வழக்கு பதிவு செய்து மூன்று தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் கிருஷ்ணகிரியை சேர்ந்த ரகு, முருகன் சதீஷ்குமார் மற்றொரு சதீஷ்குமார் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 3 பேரை தேடி வரும் நிலையில், யுனோவா காரும், 10 லட்சம் ரூபாயையும் மீட்டுள்ளார்.