தினமும் வீட்டில் காலை, மாலை என இருவேளைகளிலும் விளக்கு ஏற்றுவது நல்லது என்று நம் முன்னோர்கள் நமக்கு சொல்லி தந்த மரபு ஆகும். மேலும் இது எல்லா மதங்களுக்கும் பொதுவானது.
வீட்டில் எந்த விசேஷம் நடந்தாலும் விளக்கேற்றி அந்த நிகழ்வை தொடங்குவது தமிழக மக்களின் வழக்கமாகும். அதேபோல், திருமணம் முடிந்து வீட்டிற்குள் வரும் மருமகளையும் முதலில் விலைக்குத்தான் ஏற்ற சொல்லுவார்கள்.
விளக்கு ஏற்றுவதில் நிறைய சாஸ்திரங்கள் உள்ளன. அதன்படி எந்த ஒரு வீட்டில் தினமும் காலை மாலை என இருவேளையும் விளக்கு ஏற்றி வைக்கப்படுகிறதோ… அந்த வீட்டில் ஒரு போதும் பிரச்சனைகளும் துன்பங்களும் வருவதில்லை எனவும் அந்த வீட்டில் செல்வ செழிப்பும், பண வரவும், சீராக இருக்கும் எனவும் நம் முன்னோர்கள் தெரிவித்துள்ளனர்.
இப்படி பல அற்புத பலன்களை கொடுக்கும் விளக்கு, எவ்வளவு நேரம் எரிய வேண்டும் என்கிற சாஸ்திரமும் உண்டு.
பொதுவாக வீட்டில் ஒற்றை எண்ணிக்கையில் தான் விளக்கு ஏற்றி வைக்க வேண்டும். முதலில் விளக்கில் எண்ணெய் ஊற்றி விட்டு தான் திரியை நாம் போட வேண்டும்.
வீட்டில் காலை மற்றும் மாலை வேளையில் விளக்கு ஏற்றும் பொழுது நல்ல நேரம் பார்த்து ஏற்றுவதன் மூலம் நிறைய நல்ல பலன்களை தரும். 90 நிமிடங்களுக்கு மேல் விளக்கை எரிய விடக்கூடாது விளக்கை குளிர வைக்கும் போது புஷ்பத்தை கொண்டு தான் குளிர வைக்க வேண்டும்.