ஒரு கீரிம் பண்ணுக்கு எவ்வளவு வரி..? கர்வமாக சொல்வேன் 2026 தேர்தலிலும்..!! முதலமைச்சர் ஸ்டாலின் அனல் பேச்சு..!!
திமுக சார்பில் நடைபெற்ற பவளவிழாவில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் “ஒரு கிரீம் பண்ணுக்கு எவ்வளவு வரி என்று கேட்க முடியாத நிலை உள்ளது.. என மத்திய அரசை மறைமுகமாக விமர்சித்து பேசியுள்ளார்.. மேலும் “தொண்டர்கள் இல்லாமல் திமுகவும் இல்லை, நானும் இல்லை” திமுகவை வாழ வைத்துக் கொண்டிருக்கும் தொண்டர்கள், நிர்வாகிகளை வணங்குகிறேன் என முதலமைச்சர் ஸ்டாலின் பேசியுள்ளார்..
சென்னை நந்தனம் YMCA மைதானத்தில்., அறிஞ்சர் அண்ணாவின் பிறந்தநாளையும்., தந்தை பெரியார் பிறந்தநாளையும்., மற்றும் திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கிய நாளை கொண்டாடும் விதமாக இன்று முப்பெரும் பவளவிழா கொண்டாடப்பட்டது. முன்னதாக பெரியார் மற்றும் அண்ணாவிற்கு மரியாதை செய்யப்பட்டது..
அதனை தொடர்ந்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் “கழகம் நல்ல கழகம்” என்ற பாடலுடன் விழாவை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது “தொண்டர்கள் இல்லாமல் திமுக இல்லை, தொண்டர்கள் இல்லாமல் நானும் இல்லை. என்னையும் திமுகவையும் வாழ வைத்துக்கொண்டிருக்கும் தொண்டர்கள், மற்றும் நிர்வாகிகளை முதலில் நான் வணங்குகிறேன்.
இந்த பவள விழா, முப்பெரும் விழாவை பார்க்கும் போது எழுச்சிமிகுந்த மாநாட்டை பார்ப்பது இருக்கிறது.. அதிலும் இந்த விழாவானது என்னுடைய தலைமையில் கொண்டாடப்படுவது எனக்கு மிக பெருமையாக உள்ளது. தமிழ்நாடும் திமுகவும் எனக்கு இரு கண்களை போல., தமிழ்நாட்டில் முதலீட்டை ஈர்பதற்காக கடந்த மாதம் ஆகஸ்ட் 27ம் தேதி அமெரிக்க சுற்றுபயணம் மேற்கொண்டேன்..
அமெரிக்க பயணத்திற்கு சென்றோம் என்றதைவிட வென்றோம் என்று சொல்வதே சரியாக இருக்கும். பல்லாயிரக்கணக்கான கோடி முதலீடுகளுடன் பல வேலைவாய்ப்புகளை நம் தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்துள்ளோம்..
கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் திமுக பல சாதனைகளை செய்துள்ளது., மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை., மகளிருக்கான விடியல் பயணம்., உயர் கல்வி படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய். பள்ளிக் குழந்தைகளுக்கு காலை உணவுத் திட்டம் என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது..
இப்படி ஒவ்வொரு தனி மனிதரையும் சார்ந்திருக்கிற அரசாக திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் நாம் கொண்டு வந்துள்ள திட்டத்தை இதுவரை எத்தனை மாநிலங்களில் மற்ற அரசுக்கள் செயல்படுத்தி வருகிறது..? நாம் கொண்டு வந்த காலை உணவு திட்டத்தை பார்த்து தான் கரநாடக., கேரளா மாநிலம் கொண்டு வந்தது அதை நினைக்கும் போது மிக பெருமையாக இருக்கிறது..
தமிழ்நாட்டை தொடர்ந்து வளம் மிக்க மாநிலமாக மாற்ற அரசு செயல்பட்டு வருகிறது. நம்முடைய எல்லா கனவுகளும் நிறைவேறிவிட்டதா என்று கேட்டால்.? இல்லை என சொல்ல வேண்டும் காரணம் மாநில உரிமைகள் நிறைவேறிட ஒரு ஒன்றிய அரசு அமையவில்லை. நிதி உதவி உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு இன்னமும் நாம் போராட வேண்டிய சூழலில் தான் இருக்கிறோம்.
இப்படிப்பட்ட நெருக்கடியான நிலையில் கூட தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக முன்னேற்றியிருக்கிறோம். இன்னும் சரியான நிதி கிடைத்தால் தமிழ்நாட்டை மேலும் முன்னோடி மாநிலமாக மாற்ற முடியும். கலைஞர் எளிமையாக சொன்னார், நம்ம கோட்டையில் இருந்தாலும் அங்கு இருக்ககூடிய புல்லை வெட்ட வேண்டும் என்றால் கூட நமக்கு உரிமை இல்லை. மேலே அனுமதி வாங்க வேண்டும். இன்றைக்கு கிரீம் பண்ணுக்கு எவ்வளவு வரி.? என்று கேட்க கூட உரிமை இல்லாத நிலை உருவாகியிருக்கு.
குறைவான நிதி கிடைக்கும் போதே இவ்வளவு செய்ய முடியும் என்கிற போது முழுமையாக கிடைத்தால் மேலும் தமிழ்நாட்டின் நிலையை மாற்ற முடியும். வரும் 2026 தேர்தலில் வரலாறு காணாத வெற்றியை பெறுவதே நமது இலக்காக இருக்க வேண்டும். ஆணவத்தில் சொல்லவில்லை. அடுத்து வரும் தேர்தல்களிலும் திமுகவே வெற்றி பெறும். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..