வெயில் காலத்தில் குழந்தைகள் எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்..?
கோடைகாலத்தில் குழந்தைகள் அதிக தண்ணீர் குடிக்க வேண்டும். ஆனால் யாரும் அதை சரியாக பின் பற்றுவதில்லை குறைந்தது எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்பது பற்றி பார்க்கலாம்.
1-2 வயது குழந்தைகளுக்கு அவ்வப்போது தண்ணீர் கொடுக்க வேண்டும், இந்த வயது குழந்தைகள் எப்பொழுதும் வெயிலில் சென்று விளையாடுவதை விரும்ப மாட்டார்கள். எனவே அவ்வப்போது அவர்களுக்கு தண்ணீர் கொடுத்தால் போதும்.
3 – 6 வயது குழந்தைகளுக்கு குறைந்தது 8 டம்ளர் அளவு தண்ணீராவது குடிக்க வேண்டும்.., எப்பொழுது துறுதுறுவென்று இருக்கும் இவர்களுக்கு அதிக ஆற்றல் தேவைப்படும். எனவே குறைந்தது 8 டம்பளர் அளவு தண்ணீர் கொடுக்கலாம்.
6-10 வயது குழந்தைகள் நாளொன்றுக்கு 1 1/2 லிட்டர் அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். அதிலும் எப்பொழுதும் அதிகம் வெயிலில் விளையாடி கொண்டிருக்கும் குழந்தைகள் 3லிட்டர் தண்ணீர் கொடுக்க வேண்டும்.
11-15 வயது சிறுவர்களுக்கு நாளொன்றுக்கு 2 1/2 லிட்டர் அளவு தண்ணீர் குடிக்கவேண்டும், வெளியே சென்று வரும் குழந்தைகள் 3 1/2 லிட்டர் அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.
மேலும் இதுபோன்ற பல குழந்தைகள் குறிப்புகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..