புட்டரிசி அல்வா செய்வது எப்படி..? சமையல் குறிப்பு-2
செய்ய தேவையான பொருட்கள் :
1 1/2 கப் புட்டரிசி,
1/2 கப் சர்க்கரை,
1 கப் தேங்காய்ப்பால்,
200மிலி தண்ணீர்,
4ஸ்பூன் நெய்,
முந்திரி தே.அளவு
பாதாம் தே.அளவு.
ஏலக்காய் 2.
செய்முறை :-
1 1/2 கப் அளவு புட்டரிசியை தண்ணீரில் ஊற வைக்க வேண்டும், 30 நிமிடம் கழித்து ஊறவைத்த புட்டரிசியை, தண்ணீர் வடிகட்டி, மிஸ்யில் அரைத்து மாவாக்கி எடுத்துக்கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் 200 மிலி தண்ணீர் சேர்த்து சர்க்கரை கலந்து நன்கு பாகு காய்ச்ச வேண்டும். பாகு பதத்திற்கு வந்தவுடன் அதில், கொஞ்சம் கொஞ்சமாக புட்டரிசி மாவு சிறிது சிறிதாக சேர்த்து கிளற வேண்டும்.
கெட்டியானதும், தேங்காய்ப் பால் ஊற்றி கிளற வேண்டும். அனைத்தும் கலந்து 3 நிமிடம் கிளறி விட வேண்டும். மற்றொரு பாத்திரத்தில் நெய் ஊற்றி முந்திரி பருப்பு, பாதம் பருப்பு மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும்.
வறுத்து எடுத்த இந்த.., முந்திரி மற்றும் பாதாமை, புட்டரிசி அல்வாவில் கிளறி இறக்க வேண்டும்.
மேலும் இதுபோன்ற பல சமையல் குறிப்புகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..
-வெ. லோகேஸ்வரி.