கோடை வெயிலில் இருந்து பாதுகாத்து கொள்ளவது எப்படி? சில வழிமுறைகள்
கோடை என்றாலே கொளுத்தும் வெயில் தான் முதலில் நினைவில் வரும். அதுவும் மே (சித்திரை ) மாதம் என்றால் அதன் தாக்கம் அதிகமாகவே இருக்கும்.
அப்படி நம்மை சுட்டெரிக்கும் சூரியனிடம் இருந்து நம்மை பார்த்துக்கொள்வது எப்படி? என மருத்துவர் வாசு தேவன் சொல்கிறார்.
பொதுவாகவே பலருக்கும் குளிர்ச்சி உடல், சூட்டு உடல் என இருக்கும், சூட்டு உடல் இருப்பவர்கள் தான் கோடை காலத்தில் மிக கவனமாக இருக்க வேண்டும்.
எந்த உடல் கொண்டவராக இருந்தாலும் தினமும் காலை உணவாக வாரத்தில் இரண்டு முறையாவது. கேழ்வரகு கூழ் அல்லது மோர், தயிர் கலந்த பழைய சோறு எடுத்துக்கொள்வது நல்லது.
காலை உணவு முடித்த பின் தர்பூசணி, வெள்ளரிக்காய், கிர்ணிப்பழம் போன்றவற்றை எடுத்துக்கொள்வது சிறந்தது. இதனால் உடல் குளிர்ச்சி அடைவது மட்டுமின்றி, வயிற்று வலி, வயிற்று போக்கு ஆகாமல் தடுக்கும்.
வயதனவர்கள், கர்பிணி பெண்கள், குழந்தைகள், காலை 11மணி முதல் மாலை 3 மணி வரை வெளியே செல்வதை தவிர்க்கலாம். அந்த நேரத்தில் தான் சூரிய கதிர்வீச்சு அதிகமாக இருக்கும், அதை தாங்கும் அளவிற்கான எதிர்ப்பு சக்தி அவர்களுக்கு கிடையாது.
கட்டாயம் செல்ல வேண்டும் என்ற சூழலில் இருப்பவர்கள், தண்ணீரோடு சேர்த்து, அவர்களின் மருத்துவம் சார்ந்த பொருட்களை எடுத்துக்கொண்டு செல்ல வேண்டும்.
தினமும் 20லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். குறைந்த பட்சத்தில் 5லிட்டர் தண்ணீராவது குடிக்க வேண்டும். அப்படி குடித்தால் பெரியம்மை போன்ற நோய்கள் வராமல் இருக்கும்.
இருக்கமான ஆடைகள் அணிவதை தவிர்த்து, பருத்தி நூலிலான ஆடைகளை அணிவது உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது. பருத்தி உடலில் உள்ள வியர்வையை உறிஞ்சி விடும், இதனால் படர்தாமரை வராமல் தடுக்கும்.
என அறிவுறுத்தினார் மருத்துவர் வாசு தேவன்.