சாமானியனின் குரல்

superadmin
தமிழக அரசு டெல்டாவுக்காக சட்டம் போடுவது குப்பைத் தொட்டிக்கு தான் போகும் என்ற வைகோவின் விமர்சனம்

Vote Now

தமிழக அரசு டெல்டாவுக்காக சட்டம் போடுவது குப்பைத் தொட்டிக்கு தான் போகும் என்று வைகோ விமர்சனம்

காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அமைச்சரவை கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக சொல்கிறார்கள். ஆனால் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட மத்திய அரசு விரும்பாது. எனவே காவிரி டெல்டா பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டம் வந்தே தீரும். இதற்கு எதிராக தமிழக அரசு தனி சட்டம் இயற்றுவது, தீர்மானம் இயற்றுவதை மத்திய அரசு பொருட்படுத்தாது. தமிழக அரசின் தீர்மானம் குப்பை தொட்டிக்குத்தான் போகும். எனவே தஞ்சை விவசாயிகள் விழித்துக் கொள்ள வேண்டும். திட்டத்தை கைவிடக்கோரி விவசாயிகள் திரண்டு போராட வேண்டும். மத்திய அரசை கண்டிக்காவிட்டால் தஞ்சை டெல்டா பகுதியை பாலைவனமாகி விடும் என வைகோ விமர்சித்துள்ளார்.

You cannot copy content of this page
Madhimugam