நியூஸ் கிளிக் இணையதள நிறுவனர் கைது..!! உச்சநீதிமன்றம் வெளியிட்ட அதிரடி தீர்ப்பு..!!
மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் இந்தியாவிற்கு எதிரான பிரச்சாரத்தை நியூஸ் க்ளிக் நிறுவனம் தொடங்கியது.., வெளிநாடுகளின் ஆதரவை பெற்று அமெரிக்காவை சேர்ந்த நெவில்ராய் சிங்காம் நியூஸ் க்ளிக் நிறுவனதிற்கு பல நிதிஉதவிகளை செய்துள்ளார் என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.
அதனை தொடர்ந்து நியூஸ் க்ளிக் செய்தி நிறுவனத்திற்கு வெளிநாடுகளில் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 38.05 கோடி ரூபாய் பணத்தை சட்டவிரோதமாக பெற்றிருப்பதாக வழக்கு தொடரப்பட்டது. சீனாவுக்கு ஆதரவான செய்திகளை வெளியிடவே வெளிநாடுகளில் இருந்து இந்தப் பணம் கொண்டுவரப்பட்டு பணப் பரிமாற்றம் செய்யப்பட்ட வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து டெல்லியில் 30க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையின் போது சிபிஎம் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி வீட்டில் தங்கி இருந்த செய்தியாளர் ஒருவரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். அவரிடம் இருந்த செல்போன், லேப்டாப் மற்றும் ஹார்டிஸ்க் போன்றவை பறிமுதல் செய்யபட்டது.
அதனை தொடர்ந்து நியூஸ் க்ளிக் நிறுவனர் பிர்புர் புர்க்யஸ்தா மற்றும் அமித் சக்கரவர்த்தி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்கள் மீது பாதுகாப்புச் சட்டம் “ஊபா” (UAPA)-ன் கீழ் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டது.
அது டெல்லியில் பெரும் சர்ச்சையை கிளப்பியது, அந்த நடவடிக்கை களுக்கு “இந்தியா” கூட்டணி தலைவர்கள் பெரும் கண்டனம் தெரிவித்தனர். அதனிடையே அவர்களது கைது நடவடிக்கை தொடர்பாக பிர்புர் புர்க்யஸ்தா உச்சநீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தார்.
அந்த வழக்கை விசாரணை செய்த டெல்லி உச்சநீதிமன்றம், பிர்புர் புர்க்யஸ்தாவை ஊபா சட்டத்தின் கீழ் கைது செய்வது சட்டவிரோதம் என்றும் அவரை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்..