மூன்று ஒரு நாள் தொடரில் கடைசி ஒரு நாள் போட்டியில் இந்தியா அணி வங்கதேசத்துடனான போட்டியில் பிரம்மாண்ட வெற்றி பெற்றுள்ளது. ஏற்கனவே இரண்டு போட்டிகளை வென்ற வங்கதேசம் தொடரை கைப்பற்றி கோப்பையை வென்றது.
இந்தியா அணி மூன்று ஒரு நாள் மற்றும் இரண்டு டெஸ்ட் தொடர்களை கொண்ட சுற்றுப்பணத்திற்கு வங்கதேசம் சென்றது. முதல் இரண்டு போட்டிகளில் தோலிவியடைந்த இந்திய அணி மூன்றாம்மற்றும் கடைசி போட்டியில் நேற்று களம் இறங்கியது. கேப்டன் ரோஹித் ஷர்மாவிற்கு காயம் காரணமாக வெளியேறியதால் இந்த போட்டியில் ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டார். முதலில் டாஸ் வென்ற வங்கதேசம் பந்துவீச்சை தேர்வுசெய்தது.
முதலில் பேட்டிங் இறங்கிய இந்தியா அணி தொடக்க ஆட்டக்காரர் தவான் 3 ரன்களில் வெளியேறினார். பின்னர் ஜோடி சேர்ந்த இஷான் கிஷன் மற்றும் விராட் கோலி ஜோடி மிக சிறப்பாக ஆட தொடங்கினர். இளம் வீரர் இஷான் கிஷன் தனக்கு கிடைத்த வாய்ப்பில் அற்புதமான ஆட்டத்தை வெளிக்காட்டினார். அணைத்து பந்துகளையம் பௌண்டரிக்கு பறக்கவிட்டார். வங்கதேச பந்துவீச்சாளர்களை ஒரு கை பார்த்த இஷான் கிஷன் அதிரடியாக ஆடி இரட்டை சதம் அடித்தார். வெறும் 126 பந்துகளில் தன் இரட்டை சதத்தை பூர்த்தி செய்து அசத்தினார். மறுபக்கம் அவருக்கு துணையாக ஆடிய விராட் கோலி 3 ஆண்டுகள் களைத்து ஒரு நாள் போட்டியில் தனது தனது 44வது சதத்தை பதிவு செய்து அசத்தினார். 290 ரன்கள் பார்ட்னெர்ஷிப் இருக்கும் பொழுது தஸ்கின் அஹமட் பந்தில் இஷான் கிஷன் ஆட்டமிழக்க, பின் விராட் கோலியும் சாகிப் அல் ஹசன் பந்தில் ஆட்டமிழந்தார். பின்னர் ஒரு ஒருவராக ஆட்டமிழக்க வாஷிங்டன் சுந்தர் 37 ரன்களிலில் ஆட்டமிழக்க இந்தியா அணி 50 ஓவர் முடிவில் 409 ரன்கள் எடுத்து இமாலய இலக்கை நிர்ணயித்து வரலாறு படைத்தது.
410 ரன்கள் என்ற இலக்கை துரத்திய வங்கதேசம் தனது தொடக்கத்திலேயே விக்கெட்களை இழந்தது. இந்திய பந்துவீச்சாளர்களின் சிறப்பான ஆட்டத்தால் சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்தனர். சாகிப் அல் ஹசன் 43 ரன்கள் லிட்டான் தாஸ் 29 என்று ஆறுதல் தந்தாலும் தொடர்ந்து விக்கெட்களை இழந்தனர். இதனால் 34 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் 182 ரன்களுக்கு இழந்து சுருண்டது. இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் சார்பில் ஷார்துல் தாகூர் மூன்று விக்கெட்களை எடுத்தார். உம்ரன் மாலிக் மற்றும் அக்சர் படேல் 2 விக்கெட்களை வீழ்த்த குல்தீப், சிராஜ் மற்றும் வாஷிங்டன் தலா 1 விக்கெட்களை எடுத்தனர்.
ஆட்ட நாயகனாக இஷான் கிஷன் தேர்ந்தெடுக்கப்பட்டார், தொடர் நாயகன் விருதை மெஹிதி தட்டிச் சென்றார். இந்தியா அணி ஆறுதல் வெற்றி பெற்றது ஏற்கனவே 2 போட்டிகளை வென்ற வங்கதேச அணி தொடரை கைப்பற்றி கோப்பையை வென்றது.