பைக் ரேஸில் அஜித்துடன் போட்டி போடும் ஹீமா குரேஷி!

அஜித் நடிக்கும் ‘வலிமை’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கும் ஹீமா குரேஷி வெளியிட்டுள்ள புகைப்படமும் வீடியோவும் வைரலாகி வருகிறது.

ஹெச்.வினோத் இயக்கும் ‘வலிமை’ படத்தில் அஜித்குமார் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக பாலிவுட் நாயகி ஹீமா குரேஷி நடிக்கிறார். ‘என்னை அறிந்தால்’ படத்திற்கு பிறகு அஜித் இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு வேகமாக நடந்த வந்த நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தற்போது மிகவும் பாதுகாப்புடன் நடந்து வருகிறது.

ஹீமா குரேஷி

இந்நிலையில், வலிமை படத்தின் நாயகியாக நடித்து வரும் ஹீமா குரேஷி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புல்லட் ஓட்டுவது போன்ற புகைப்படமும் வீடியோவும் பகிர்ந்துள்ளார். அஜித்துடன் பைக் ரேசில் இடம்பெறுவது போன்று காட்சிகள் இருப்பதால் அவை தத்ரூபமாக இடம்பெற வேண்டும் என்று, ஹீமா குரேஷியும் பயிற்சி எடுத்து வருவதாக கூறப்படுகிறது.

மேலும், அந்த பதிவில் “வாழ்க்கை என்பது தினமும் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதில் இருக்கிறது. அத்துடன் உங்கள் பயத்தை மீறுவதிலும்” என்று அதில் குறிப்பிட்டுள்ளார். ஹீமா குரேஷியின் இந்த புகைப்படங்களும் வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

What do you think?

‘கொரோனாவுக்கு மருந்து’ பாபா ராம்தேவின் விளம்பரத்திற்கு மருத்துவர்கள் எதிர்ப்பு!

திருப்பூர் அருகே கோர விபத்து; மாணவர்கள் உட்பட 6 பேர் பலி