‘தூக்கில் தொங்கிய கர்ப்பிணி மனைவி’ சடலத்தை பார்த்த கணவனும் தற்கொலை!

கடலூரில் தூக்கில் தொங்கிய கர்ப்பிணி மனைவியின் சடலத்தை பார்த்த கணவனும் தற்கொலை செய்துகொண்டார்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த திருவதிகையை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் மகேஸ்வரி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

திருமணமானது முதல் அறிவுரை குடிக்கு அடிமையான மணிகண்டன் வேலைக்கு செல்லாமலும் இருந்துள்ளார். மகேஸ்வரி அறிவுரை கணவருக்கு பலமுறை அறிவுரை கூறியும் அவர் ஏற்கவில்லை

இந்த நிலையில் வழக்கம்போல் வீட்டுக்கு வந்த மணிகண்டன் 3 மாத கர்ப்பிணியாக உள்ள மகேஸ்வரியிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மகேஸ்வரி, தன் கணவனை திருத்த முடியவில்லை என கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

போதையில் மனைவி தற்கொலை செய்துகொண்டதை கூட தெரியாமல் தூங்கிய மணிகண்டன் காலையில் எழுந்து பார்த்தபோது மனைவி தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தன்னால் தான் தனது மனைவி தற்கொலை செய்துகொண்டார் என்பதை உணர்ந்த அவரும் தற்கொலை செய்து கொண்டார்.

நீண்ட நேரமாகியும் அவர்களது வீடு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போலீசார் தூக்கில் தொங்கிய கணவன், மனைவியின் உடலை மீட்டு பிரதேச பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

What do you think?

தோனியின் எதிர்காலம் குறித்து கவாஸ்கர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

‘சென்னை கடற்கரைகள் மூடப்படும்’ மாநகராட்சி திடீர் அறிவிப்பு!