விபரீதத்தில் முடிந்த கணவன் மனைவி வாக்குவாதம்..!! பரபரப்பான தர்மபுரி..!!
ஏரியூர் அருகே மனைவியை கல்லால் தாக்கி கொலை செய்த கணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தை அடுத்த ஏரியூர் அருகே திருத்தங்கல் மேடு பகுதியைச் சேர்ந்த குழந்தை கவுண்டர் மகன் கோவிந்தன் இவரது மனைவி சின்ன பொண்ணு இவர்களுக்கு இரண்டு மகன் ஒரு மகள் உள்ளனர் இந்த நிலையில் கோவிந்தன் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இவர் தனது சொந்த நிலத்தில் விவசாயம் செய்தும் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் கணவன் மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் இன்று விவசாய நிலத்தில் மனைவி ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பொழுது கணவன் மனைவி இருவருக்கும் இடையே வழக்கம்போல் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரம் அடைந்த கணவர் மனைவியை தலை மீது பெரிய கல்லால் தாக்கி கொடூரமாக கொலை செய்துள்ளார். அதனை அடுத்து அவரும் மனைவி இறந்த துக்கத்தில் வீட்டின் அருகில் இருந்த மரத்தில் தற்கொலை செய்து கொண்டார். இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் ஏரியூர் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
தகவலின் பெயரில் பென்னாகரம் காவல் துணைக் கண்காணிப்பாளர் மகாலட்சுமி ஏரியூர் காவல் ஆய்வாளர் யுவராஜ் சடலங்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.. குடும்பத்தகராவில் மனைவி மீது கல்லை போட்டு கொன்றுவிட்டு கணவனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..