கஞ்சா விற்பனையில் கணவன் மனைவி..!! அதிரடியாக களமிறங்கிய போலீஸ்…!!
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் கிராமிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தோரணம்பதி சோதனை சாவடியில் காரில் கஞ்சா கடத்தி வருவதாக திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தாவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது.தகவலின் பெயரில் தனிப்படை போலீசார் சோதனை சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.அப்போது சோதனை சாவடி அருகே வந்த எட்டிகா காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.காரில் இருந்த ஆண்கள் பெண்கள் என நான்கு பேர் இருந்தனர்.
அவர்களிடம் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர் அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியதால் சந்தேகம் அடைந்த தனிப்படையினர் காரை சோதனை செய்தது சுமார் 20 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. காரணமாக நான்கு பேரையும் காவல் நிலையம் அழைத்து வந்தனர்.
மேலும் காரை பறிமுதல் செய்து திருப்பத்தூர் கிராமிய காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். பின்னர் விசாரணையில் பொம்மி குப்பம் பகுதியைச் சேர்ந்த முருகன்(46),அவரது மனைவி மஞ்சுளா (40) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த ராஜவேல்(43) அவரது மனைவி ஜோதி(35) உள்ளிட்ட நான்கு நபர்களும் வெளிமாநிலத்தில்லிருந்து கஞ்சா கடத்தி வந்ததை போலீசாரிடம் ஒப்புக்கொண்டனர்.
மேலும் கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்திய சொகுசு காரையும் பறிமுதல் செய்து திருப்பத்தூர் கிராமிய போலீசார் கணவன் மனைவி உட்பட நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்து திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் கணவன்களோடு சேர்ந்து மனைவிமார்களே கஞ்சா கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டது திருப்பத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..