மனைவியை கத்தியால் குத்தி வீடியோ வெளியிட்ட கணவன்..!! பரபரப்பான புதுப்பேட்டை..!!
புதுப்பேட்டை ரோடு பகுதியில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன்.. மனைவிக்கு வேறு ஒருவருடன் தகாத உறவு இருந்ததால் கத்தியால் குத்தியதாக சொல்லப்படுகிறது.. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு..
திருப்பத்தூர் மாவட்டம் குரிசிலப்பட்டு அடுத்த கல்லு குட்டை பகுதியைச் சேர்ந்தவர் பிரகாசம் மகன் பிரவீன் (வயது 30) இவர் சென்னையில் பேக்கரி கடை ஒன்றை நடத்தி வருகிறார்.. இந்நிலையில் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு வெங்கடேஸ்வரா நகர் பகுதியை சேர்ந்த சக்திவேல் மகள் நந்தினி (வயது 28) என்பவரை திருமணம் செய்துள்ளார்..
திருமணம் ஆகி பல ஆண்டுகளாக குழந்தைகள் ஏதும் இல்லாத நிலையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு கணவனிடமிருந்து பிரிந்து தனது அம்மா வீட்டில் வாழ்ந்து வந்துள்ளார் நந்தினி .
அதன் பின் புதுப்பேட்டை ரோடு பகுதியில் உள்ள ஸ்ரீராம் பைனான்ஸில் டாக்குமெண்ட் ஸ்டாப்பாக வேலைக்கு சேர்ந்ததாக சொல்லபடுகிறது.. இந்நிலையில் கணவன் பலமுறை தனது மனைவியை அழைத்தும் வராத காரணத்தினால் மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த ஜூன் 29 ஆம் தேதி ஸ்ரீராம் பைனான்ஸ்க்கு சென்ற கணவன் தனது மனைவியை தனியாக அழைத்து தன்னிடம் வர அழைத்துள்ளார். அதனால் மனைவி வர மறுத்ததால் புதுப்பேட்டை ரோடு பகுதியில் பிரவீன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக மனைவின் உடம்பில் பல்வேறு இடங்களில் குத்தியுள்ளார். அப்போது நந்தினியின் அலறல் சத்தம் கேட்டு அங்குவந்த அக்கம் பக்கத்தினர் நந்தினியை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
மருத்துவர்கள் அளித்த தகவலின் பேரில் காவலர்கள் பிரவீனை கைது செய்து சிறையில் அடைத்தனர்., ஆனால் ஜாமினில் பிரவின் விடுவிக்கப்பட்டுள்ளார்.. திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் தினந்தோறும் நேரில் சென்று கையெழுத்திட வேண்டுமென நீதிபதி பிரவினுக்கு உத்தரவிட்டுள்ளார்.. அதன் படி பிரவின் தினமும் காவல்நிலையத்தில் கையெழுத்திட்டு வருவதாக சொல்லபடுகிறது..
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மன உளைச்சலில் இருந்த பிரவீன் தான் தற்கொலை செய்து கொள்வதாக கூறி வீடியோ ஒன்றை வாட்ஸ் ஆப் ஒன்றில் பதிவிட்டுள்ளார்.., அதில் அவர் கூறியிருப்பதாவது..
தன்னுடைய மனைவி நந்தினிக்கும் ஸ்ரீராம் பைனான்ஸில் வேலை செய்து வரும் ஸ்ரீதர் என்பவருக்கும் ஒரு கள்ள தொடர்பு இருக்கு அவங்க 2 பேரும் எப்போ பாரு பேசிட்டு வாட்ஸ் அப்பில் சாட் செய்யுறாங்க.. இதை நான் தட்டி கேட்டதுக்கு தான் எங்களுக்குள்ள சண்டை வந்து என் மனைவியை நான் கத்தியால குத்தினேன்..
ஆனால் மகளிர் போலிஸ் என்னை அழைத்து சென்று நான் மனைவி மீது சந்தேகம் படுறனு சொல்லி அடிச்சாங்க., நான் சந்தேகப்படுறவனா இருந்தா என் மனைவியோட சேர்ந்து வாழ ஆசைப்பட்டு அவள வீட்டுக்கு வானு கூப்பிட்டு இருக்க மாட்டேன்.. நான் என் மனைவியை தட்டி கேட்டதுக்கு வரதட்சணை கொடுமைன்னு கம்ப்ளைண்ட் பண்றாங்க இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் நான் அவரை கத்தியால் குத்தி சிறை சென்று வந்துள்ளேன்..
ஆனா எல்லோரும் என் மனைவிக்கு சாதகமாக ஒருதலைபட்சமாக செயல்படுகிறார்கள் இதனால் நான் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகிவிட்டேன் இனிமேல் நான் இருக்கப் போவதில்லை என விஷம் அருந்தி தற்கொலை செய்து கொள்வதாக கூறியும் வீடியோவை பதிவு செய்து நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு ஷேர் செய்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதனையடுத்து பிரவின் தற்கொலைக்கு காரணமான நந்தினி மற்றும் அவருடைய தாயார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியலில் போராட்டத்தில் ஈடுபட்டனர்., அப்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியே நின்று கொண்டிருந்த காவலர்கள்
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தடுத்து நிறுத்தி., சம்மந்தபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்., காவலர்கள் உறுதி அளித்த பின்னரே அவர்கள் அனைவரும் களைந்து சென்றனர். இதனால் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சில நேரம் பரபரப்பான சூழல் காணப்பட்டது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..