தோல் நோயால் பாதிக்கப்பட்ட கணவன்.. கொலை செய்த மனைவி..
சென்னை வில்லிவாக்கம் அருகே உள்ள சிட்கோ நகரை சேர்ந்தவர் கவுஷ் பாஷா. இவருக்கு ஷாஜிதா பானு என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.
கவுஷ் பாஷாவுக்கு தோல் நோய் இருப்பதால், அவருடைய மனைவி அவரை தொடவே மாட்டாராம். மேலும், கணவர் அருகில் வந்தாலும் தள்ளி சென்றுவிடுவாராம். இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சம்பவத்தன்றும் கணவன் மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையே தகராறு முற்றிய நிலையில், ஷாஜிதா பானு தனது கணவனின் கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார். ஆனால், கணவரை கொலை செய்ததை மறைக்க முடிவு செய்த பானு, அவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக உறவினர்களிடம் நாடகமாடியுள்ளார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், பாஷாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்க முடிவு செய்தனர். ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த பானு, தங்களது முறைப்படி பிரேத பரிசோதனை செய்யக் கூடாது என்று போலீசிடம் கூறியுள்ளார்.
இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர், பானுவிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். அதில், கணவரை கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து பானுவை கைது செய்த காவல்துறையினர், சிறையில் அடைத்தனர்.
-பவானி கார்த்திக்