“நானும் டெல்ட்டா காரன்..” தமிழக அரசுக்கு பிரேமலதா விஜயகாந்த் வேண்டுகோள்..!
பருத்தியின் இரண்டாம் கட்ட மகசூலையாவது தமிழக அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்
இது தொடர்பாக தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் வறட்சி கால பயிரான பருத்தி விவசாயிகளின் முதல் தவணை மகசூல் முழுவதும் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
ஜூன் 14ஆம் தேதி குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் திறந்து விடப்பட வேண்டிய தண்ணீர் வழக்கத்திற்கு மாறாக இந்த ஆண்டு மிகவும் காலதாமதமாக தண்ணீர் திறந்த காரணத்தினால், அந்த தண்ணீரானது டெல்டா விவசாயிகளுக்கு எந்த பலனையும் அளிக்கவில்லை. குறுவை சாகுபடியில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு பெருத்த ஏமாற்றத்தை தந்துள்ளது குறுவை சாகுபடி என்ற நிலையே இல்லாமல் போயிற்று தொடர்ச்சியாக அல்லாமல், விட்டுவிட்டு அணைகள் திறக்கப்படுவதால், கடைமடை வரை தண்ணீர் வந்து சேர்வதில்லை குறித்த நேரத்தில் அணைகள் திறக்கப்படுவதோடு, தொடர்ச்சியாக தண்ணீர் வழங்கி விவசாயிகளின் நலனில் தமிழக அரசு அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும்.
மேலும் எதிர்வரும் சம்பா சாகுபடிக்கு தேவையான விதைநெல், உரம், பூச்சிமருந்து போன்றவைகள் விவசாயிகளுக்கு போதிய அளவு தட்டுப்பாடின்றி கிடைத்திட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதேபோல வறட்சி கால பயிரான பருத்தி விவசாயிகளின் முதல் தவணை மகசூல் முழுவதும் மழையால் பாதிக்கப்பட்ட நிலையில் இரண்டாம் தவணை மகசூல் முழுவதும் சரியான விலை நிர்ணயம் இல்லாததால் விவசாயிகள் பெரும் பாதிப்படைந்துள்ளனர். தனியார் கொள்முதல் நிறுவனங்கள் அனைவரும் கூட்டாக முடிவு எடுத்து குறைந்த விலை நிர்ணயம் செய்த காரணத்தினால் விவசாயிகள் பெரிதும் நஷ்டம் அடைந்துள்ளனர். ஆகவே இரண்டாம போ மகசூலையாவது தமிழக அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும்..
இல்லையேல் தனியார் நிறுவனங்களுக்கு தமிழக அரசே அடிப்படை விலையை சரியான விலையாக நிர்ணயம் செய்ய வேண்டும். “விவசாயிகள் சேற்றில் கால் வைத்தால் தான், நாம் சோற்றில் கை வைக்க முடியும்” என்ற வரிகளை நினைவில் கொண்டு நானும் டெல்டா காரன்தான் என்று பெருமையாக சொல்லும் முதல்வர் டெல்டா விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு உரிய நடவடிக்கை உடனடியாக எடுக்க வேண்டும் என தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது. என அறிக்கை வெளியிட்டுள்ளார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..