நான் அவன் இல்லை..!! அது போலி வீடியோ..! கொமதேக வேட்பாளர் பரபரப்பு பேட்டி..!!
லோக்சபா தேர்தலில் போட்டியிடுவதால் என்னுடைய பெயரை கெடுக்க வேண்டும் என்பதற்காக போலியான வீடியோக்களை என்னை பிடிக்காத சில பேர் பரப்புவதாக கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் வேட்பாளர் சூரியமூர்த்தி பேட்டி அளித்துள்ளார். லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின் நாமக்கல் தொகுதி அவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு இரு கட்சிகளுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
இந்நிலையில் சூர்ய மூர்த்தி அளித்திருந்த பேட்டியில், எங்கள் சாதி பெண்கள் காதலித்து திருமணம் செய்ய நினைக்கும் மாற்று சாதி இளைஞர்களை கருவறுப்போம் காதலிப்பது கலாச்சார சீரழிவு, கவுண்டர் இன பெண்கள் வேறு இன ஆண்களை காதலித்தால் வெட்டுவோம் என நான் பேசியதாக ஒரு வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
அது பொய்யான வீடியோ, அது நான் இல்லை என்னை பிடிக்காத சில பேர் நான் தேர்தலில் தோற்க வேண்டும் என்பதற்காக எடிட் செய்து இணையத்தில் பரப்பி வருகிறார்கள். கவுண்டர் இன பெண்கள் யாரும் காதலிக்க கூடாது என நான் சொல்லவேயில்லை, நானே பல திருமணங்களை நடத்தி வைத்துள்ளேன். இது எல்லாம் எதிர்க்கட்சி காரர்களின் சதி என பேட்டி அளித்துள்ளார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..