நான் கர்ணன் அல்ல, நானும் சக மனிதன் தான் – ஊரும் உறவும் 1
ஊரும் உறவும் – வாழ்க்கையில் தினமும் நாம் பல மனிதர்களை சந்திக்கிறோம். ஆனால் அதில் யாராவது ஒருசிலர் மட்டும் தான் நமக்கு நண்பர்கள் ஆகின்றனர்.
அப்படி நான் சந்தித்த மனிதர் தான் சுரேஷ். யார் இந்த சுரேஷ் ? இவர் என்ன செய்துக்கொண்டு இருக்கிறார்? என நீங்கள் நினைக்கலாம்.
அவரை பற்றி இதோ..,
பொதுவாகவே நம்மிடம் யாரவது பசி என்று வந்தால் காசு கொடுப்போம், இல்லையேல் உணவு கொடுப்போம். திருவிழா சமயத்தில் அன்னதானம் அளிப்போம். ஆனால் நண்பர் சுரேஷ், தினமும் பகல் மற்றும் இரவு என இரு வேலையும், ஆதாரவற்றோர்களுக்கு இலவசமாக உணவு அளிக்கிறார்.
ஒரு நாள், இரண்டு நாள் என்றால் சரி. தினமும் இலவசமாக உணவு தருகிறார் என்றால் இவரின் பின்னணி என்ன ? அவரிடம் சென்று கேட்டதற்கு.
என் பெயர் சுரேஷ். நான் பெரிதாக ஒன்றும் படிக்கவில்லை, இதற்கு முன் ஒரு டாட்டூ (Tatoo ) ஷாப் வைத்திருந்தேன். சிறு வயதில் இருந்தே, ஆதரவற்றவர்களுக்கு இலவசமாக உணவு கொடுக்க வேண்டும் என்பது என் ஆசை, அந்த ஆசையை நிறைவேற்றுவதற்காக. ஒரு நாள் ஆதரவற்றவர்களுக்கு இலவசமாக உணவு கொடுத்தேன் அதில் கிடைத்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை.
அதிலும் ஒரு வயதான பாட்டி என்னை கை எடுத்து கும்பிட்டு, உன்னால் தான் இன்று நான் சாப்பிடுகிறேன் தம்பி, நான் சாப்பிட்டு மூன்று நாட்கள் ஆயிற்று. நீ மஹராசனா இருக்கனும் வாழ்த்துனாங்க. அது எனக்கு சந்தோஷமாக இருந்தாலும்.
அப்பொழுது தான், நான் சிந்தித்தேன். ஒரு வேளைக்கூட நம்மால் சாப்பிடாமல் இருக்க முடியாது. சாப்பாடு தயார் செய்வதற்கு தாமதம் ஆனாலும். பசியில் வீட்டில் அம்மாவிடம் எப்படி சத்தம் போடுவோம். ஆனால் இவர்கள் எப்படி பசி தாங்கி கொண்டு இருக்கிறார்கள்.
பசித்தால் அவர்கள் யாரிடம் சென்று கேட்பார்கள் என எண்ணினேன். அவர்களுக்கு உதவ நினைத்தேன், அன்று தொடங்கியது தான் இந்த “பசித்தால் எடுத்துக்கொள் – காசு வேண்டாம், உதவ நினைத்தால் தொடர்பு கொள் “. என ஆரம்பித்தேன்.
பசி எல்லோரிடமும் இருக்கும் ஆனால் காசு ஒரு சிலரிடம் மட்டும் தான் இருக்கும். சிலருக்கும் உதவ வேண்டும் என்ற ஆசை இருக்கும், ஆனால் அது சரியாக போய் சேருமா? இல்லையா ? ஏமாற்றுவார்களா என்ற குழப்பமும் இருக்கும், அதனால் தான் இப்படி ஒரு டைட்டில் வைத்தோம்.
டாட்டூ ஷாப் மூடிவிட்டு. ஆவடியில் ஒரு கையேந்தி உணவகம் வைத்துள்ளேன். அங்கு சாப்பாட்டிற்கு காசு தான். ஆனால் ஆதரவற்றோர், காசு இல்லாமல் கஷ்டப் படுபவர்களை பார்த்தால் இலவசமாக கொடுப்பேன்.
அதிலும் தினமும் 50பேருக்கு இலவசமாக உணவு தருகிறேன். ” பசித்தால் எடுத்துக்கொள் – காசு வேண்டாம், உதவ நினைத்தால் தொடர்பு கொள் ” இதை நான் மட்டும் தனியாக செய்யவில்லை. என்னுடன் சேர்ந்து நண்பர்கள் அனைவரும் செய்கின்றனர்.
ஒன் டைம் புட் என்று ஒரு யூ டியூப்பு ( YouTube ) சேனல் ஒன்று வைத்து இருக்கிறோம். குறைந்த Subscribers மட்டுமே இருக்கிறார்கள். அதிக Subscribers வந்தவுடன், அதில் வரும் பணத்தின் மூலம் இந்தியா முழுவதும். இலவச உணவு தர வேண்டும். என்பது என் லட்சியம். என சொன்னார் அந்த இளைஞர்.