நான் கடவுளின் மறு பிறவி..!! பாஜக தோல்வி கண்ட அந்த 3 மாநிலம்..!!
இந்தியா முழுவதும் லோக்சபா தேர்தல் 7 கட்டமாக நடைபெற்று வருகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முதல் கட்டமாக ஏப்ரல் 19ம் தேதியும்.
இரண்டாம் கட்ட வாக்கு பதிவு கேரளா வயநாட்டில் ஏப்ரல் 26ம் தேதியும்.,
மே 7 ம் தேதி மூன்றாம் கட்ட தேர்தலும்,
4ம் கட்ட தேர்தல் 9 மாநிலங்கள், மற்றும் 1 யூனியன் பிரதேசத்திலும் ஆந்திராவில் 25 தொகுதிகளிலும் நடைபெற்றது.
5ம் கட்ட வாக்கு பதிவு உத்தரபிரதேசத்தில் 14 தொகுதியிலும், மகாராஷ்டிராவில் 13 தொகுதியிலும், மேற்கு வங்கத்தில் 7 தொகுதியிலும், பீகாா், ஒடிசாவில் 5 தொகுதியிலும், ஜார்க்கண்டில் 3 தொகுதியிலும், ஜம்மு-காஷ்மீா் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களிலும் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து இன்று பீஹார், ஹரியானா, ஜம்மு காஷ்மீர்-1, ஜார்க்கண்ட் 4, டெல்லி 7 மற்றும் உத்திரபிரேதசம் 14, ஒடிசாவில் 6 பகுதியிலும் 6ம் கட்ட வாக்கு பதிவு நடைபெற்று வருகிறது.
மே 25ம் தேதியுடன் 7ம் கட்ட வாக்குப்பதிவு முடிவடைய உள்ளது.
இந்நிலையில் பாஜகவிற்கு தோல்வி பயம் வந்து விட்டதாகவும், அந்த பயத்தில் தான் மோடி தன்னை கடவுள் என கூறுவதாக ஒரு சர்ச்சை கிளம்பியுள்ளது..
கர்நாடகாவில் பாஜக சரிந்துவிட்டது. பீகாரில் நிதிஷ் குமார் பிரச்சாரம் மேற்கொள்ள வில்லை, 1 ரோடு ஷோ தவிர வேறு எந்த இடத்திலும் பாஜக பிரச்சாரம் செய்ய வில்லை. இதுவரை பீகாரில் 37 இடங்களில் 40ல் பாஜக வெற்றி பெற்றது. ஆனால் இதுவரை அவர்களுக்காக பாஜக எதுவும் செய்தது இல்லை.
இதனால் இந்தமுறை பாஜக பீகாரில் ஜெயிக்குமா என்பதே சந்தேகத்திற்கு உரியது. ராஜஸ்தானில் கடந்த முறை நடைபெற்ற சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று. பாஜகவிற்கு தோல்வி பயத்தை காட்டியது. இந்த முறை குஜராத், மற்றும் பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சியும் வளர்ந்துவிட்டது.
மகாராஷ்டிராவில் கூட பாஜக தோற்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. 80 இடங்களில் பாஜக மிகவும் மோசமான தோல்வியை சந்திக்கும்.. அந்த தோல்வி பயத்தில் தான் பாஜக இருக்கிறது.., இதை மாற்றத்தான் மோடி தன்னை கடவுள் என கூறுகிறார்.
கடவுள் என்றும் சொல்லும் மோடி என்றாவது ஒருநாளாவது மக்களின் குறைகளை காது கொடுத்து கேட்டு இருக்கிறாரா..? அப்படி இருக்கும் போது எப்படி அவர் தன்னை கடவுள் என்று சொல்லலாம். பாஜகவில் இருப்பவர்கள் கூட இந்த பேச்சை காது கொடுத்து கேட்க மாட்டார்கள்.
பிரதமர் மோடி தன்னை கடவுள் என சொல்லிக்கொண்டும். என்னை இந்த உலகிற்கு கொண்டு வந்தது பரமாத்மா தான்., நான் பயாலஜிக்கலாக பிறந்த மனிதன் அல்ல. அதற்கு பல விமர்சனங்கள் எழுப்பப்படலாம். ஆனால், நான் கடவுள் என முழுமனதாக நம்புகிறேன். என் தாய் உயிரோடு இருக்கும் வரை, இந்த உலகிற்கு என் தாய் மூலம் தான் நான் வந்தேன் என நம்பிக்கொண்டிருந்தேன்.
ஆனால் நான் பரமாத்மா மூலம் வந்தேன் என இப்போது தான் தெரிந்து கொண்டேன்.., என மோடி பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது..
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..