“மருத்துவரை நான் கொலை செய்யவில்லை நான் நிரபராதி..” சஞ்சய் ராய் உட்பட 5 பேருக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
மேற்குவங்கம் மாநிலம் ஆர்ஜி கர் மருத்துவமனையின் பயிற்சி மருத்துவர் கடந்த ஆகஸ்ட் 9ம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார். அந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
அந்த கொலை தொடர்பாக சஞ்சய் ராய் என்பவரை கைது செய்து தொடர் விசாரணை நடத்தினர்., நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சஞ்சய் ராய், நீதிபதி முன் “தான் ஒரு நிரபராதி என்றும் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்யவில்லை என்றும் தறி அழுதுள்ளார்.
இதனால் உண்மையைக் கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது., அதாவது சிபிஐ அதிகாரிகள் கொல்கத்தாவில் உள்ள நீதிமன்றத்தில் சஞ்சய் ராய் ஆஜர்படுத்தப்பட்டார். அந்த வழக்கில் சஞ்சய் ராய் மற்றும் அதில் சந்தேகிக்கும் நபர்களிடம் உண்மையைக் கண்டறியும் சோதனை நடத்த சிபிஐக்கு மாற்ற உத்தரவிடப்பட்டது. நமது நாட்டின் சட்டப்படி உண்மையைக் கண்டறியும் சோதனை நடத்த நீதிமன்றத்தின் அனுமதியும் யாரிடம் இந்த சோதனையை நடத்த விரும்புகிறார்களோ அவர்களின் ஒப்புதலும் அளிக்க வேண்டும் .
இதுகுறித்து சஞ்சய் ராய் கூறுவதாவது “நான் எந்த குற்றமும் செய்யவில்லை., என்றும் என்னைக் குற்றவாளியாக காட்ட பலரும் முயற்சி செய்வதாகவும்., அதன் காரணமாகவே என்னைக் கைது செய்துள்ளார்கள் என்றும் தான் ஒரு நிரபராதி என்பதை இந்த சோதனையில் நிரூபிப்பதாக கூறியுள்ளார்..
நீதிமன்ற காவல் : அதையடுத்து சஞ்சய் ராயக்கு உண்மையைக் கண்டறியும் சோதனை நடத்த மேற்குவங்கம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கும்படி உத்தரவிட்டுள்ளது.
சஞ்சய் ராய் மட்டுமின்றி குற்றம் நடந்ததாக சொல்லப்படும் ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் மற்றும் இந்த வழக்கில் தொடர்புடைய 5 பேரிடமும் உண்மையைக் கண்டறியும் சோதனை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த 5 மருத்துவர் தான் உயிரிழந்த பயிற்சி மருத்துவருடன் சம்பவம் நடந்த நாளில் இரவு உணவை உண்டது குறிப்பிடத்தக்கது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..