விஜய் பேச்சில் எனக்கு நம்பிக்கையில்ல..!! ஒரே போடு போட்ட சீமான்..!!
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நேற்று விக்கிரவாண்டியில் பிரமாண்டாக நடைபெற்றது.
இதில் தவெக கட்சி தலைவர் விஜய் தனது லட்சக்கணக்கான தொண்டர்கள் முன்பாக முதல் அரசியல் உரையை நிகழ்த்தினார்.
நேற்று நடைபெற்ற மாநாட்டின் தனது கட்சியின் கொள்கை, செயல்திட்டம், தனது அரசியல் எதிரிகள், மக்கள் வளர்ச்சி திட்டங்கள் என அனைத்தையும் அதிரடியாக அறிவித்தார்.
அதன் பின்னர் திராவிடக் கொள்கை குறித்தும் கூட்டணி குறித்தும் அவர் பேசினார்.. அவரின் அந்த கொள்கைக்கு ஒரு சில அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்தாலும். பல கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விஜய் எழுப்பிய கேள்விகள் மற்றும் கொள்கைகளுக்கு அவர் பதில் அளித்துள்ளார்..
இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், புதிதாக அரசியலுக்கு வந்திருக்கும் தம்பி விஜய் அவர்களை வாழ்த்துகிறோம். அவர் சொன்னது ஊழல் செய்யும் அரசியல்வாதிகளை தான்.. அதனால் விஜய் என்னை விமர்சனம் செய்வதாக நான் என ஏன் எடுத்துக்கொள்ள வேண்டும்.. ?
தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை கோட்பாடுகள் எங்களின் கொள்கை கோட்பாடுகளோடு ஒத்துப்போகது..
நான் சொல்லுவது என் நீண்ட கால இன வரலாறு., பிரச்சனைகளுக்கு தீர்வு என்னவென்று எங்களுக்கு தெரியும்..
திராவிட கொள்கைக்கு மாற்றாக வந்தவர்கள் தான்., நாம் தமிழர் கட்சியினர்… அரசியல் வரலாற்றில் காலம் எனக்கு கொடுத்த பணியை நான் சிறப்பாக செய்து முடித்தேன்., ஆனால் அது எங்களுக்கு கொடுத்தது என் இனத்தின் மரணம்.
நான் எனக்கு கொடுத்த கடமையை., சிறப்பாக செய்து முடித்தேன். அதற்கான கட்டாயத்திற்கு நான் தள்ளப்பட்டுள்ளேன்.. அதை தான் நான் இப்போது செய்கிறேன்.
திராவிடமும், தேசியமும் எனது இரு கண்கள் என தம்பி விஜய் சொல்லியுள்ளார்., அவர் சொன்ன கருத்து நாதகவின் எங்களது கொள்கைக்கு எதிரானது. திராவிடமும் தமிழ் தேசியமும் ஒன்று கிடையாது. “அது வேறு இது வேறு..” அதை முதலில் நீங்கள் புரிந்துக்கொள்ள வேண்டும்..
“இது எனது நாடு., எனது தேசம். இங்கு வாழும் மக்களுக்கான அரசியல் தமிழ் தேசிய அரசியல்..” அப்படி இருக்கையில்
விஜய் பேச்சில் எனக்கு நம்பிக்கையில்லை. அதேபோல் பெரியாரின் கொள்கைகளை நான் முன்னெடுத்து செல்வேன் என விஜய் சொல்வது எந்த வகையிலும் ஒத்துப் போகாதது..
என்.டி.ராமாராவ், தெலுங்கு தேசம் கட்சி என பெயர் வைத்தால் ஏற்றுக்கொள்ளும் உலகம்.., தமிழ்நாட்டில்
நாங்கள் தமிழ் தேசம் என பெயர் வைத்தால் அதை பாசிசம், பிரிவினைவாதம் என சொல்கிறது இது ஏற்புடையது அல்ல.
இந்த அரசியல் பயணத்தில் என் கால்களை நம்பித்தான் நான் செல்கிறேனே தவிர வேறு யாரையும் நம்பி நான் பயணிக்கவில்லை நாங்கள் தனித்து தான் போட்டியிடுவோம் நாங்கள் யாரோடும் கூட்டணி இல்லை என்பதை விட யாரையும் சார்ந்து இல்லை என சீமான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..