”என்னிடம் நிறைய செருப்புகள் உள்ளது”… விஷாலுக்கு ஸ்ரீரெட்டி பதிலடி..!
தெலுங்கு சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் ஸ்ரீ ரெட்டி. இவர், சில வருடங்களுக்கு முன்பு, நடிகர் விஷால் உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் மீது பாலியல் புகாரை முன்வைத்தார். அந்த சமயத்தில், இவரது புகார் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது.
இந்தநிலையில், நடிகர் விஷால் நேற்று தனது 47-வது பிறந்தநாளை முதியோர் இல்லத்தில் உணவு அளித்துவிட்டு, அங்கிருந்து வெளியே வந்தபோது, செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
நடிகை ஸ்ரீ ரெட்டி விஷால் மீது வைக்கப்பட்ட பாலியல் புகார் குறித்தும், செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த விஷால், “ஸ்ரீ ரெட்டி யார் என்றே எனக்கு தெரியாது. ஆனால், அவர் செய்த சேட்டைகள் என்னவென்று தெரியும். உண்மை எதுவென்று தெரியாமல், ஒருவர் மீது குற்றஞ்சாட்டுவது தவறான செயல்” என்று தெரிவித்தார்.
இதனைதொடர்ந்து தற்போது நடிகை ஸ்ரீரெட்டி தனது எக்ஸ்தள பக்கத்தில் விஷால் குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் ” மீடியா முன்னிலையில் பெண்களை பற்றி பேசும்போது உங்களது நாக்கு கவனமாக இருக்க வேண்டும். மீடியா முன்னால் பல உதாரணங்களை பேசுவதால் பொறுப்பானவர் என்று நினைத்து கொள்ள வேண்டாம். நீங்கள் ஒரு பைத்தியம் என்பதை பல முறை நிருபித்துள்ளீர்கள்.
உங்கள் வாழ்க்கையில் இருந்து வந்த பல பெண்கள் உங்களை விட்டு விலகியது ஏன்? உங்கள் நிச்சயதார்த்தம் நின்றது ஏன்? அடுத்த முறை இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள். நீங்கள் ஒரு பெரிய பதவியில் இருப்பது பெரிய விஷயமல்ல. கொஞ்சம் கண்ணியமாக இருங்கள். இல்லாவிட்டால் கர்மா உங்களுக்கு பதில் சொல்லும்.
என்னிடம் ஏராளமான கலெக்ஷன் இருக்கிறது. உங்களுக்கு ஒன்று வேண்டுமா? என்று ”செருப்பு எமோஜியுடன்” என்னிடம் சொல்லுங்கள் என்று பதிவிட்டுள்ளார். ஸ்ரீரெட்டியில் இந்த பதிவு தற்போது இணையத்தில் காட்டுதீயாய் பரவி வருகிறது.
-பவானி கார்த்திக்