நான் வாழ நான் தான் உழைக்க வேண்டும்..!! 70 வயதிலும் உழைக்கும் பாட்டி..!
பொதுவாகவே கடினமாக உழைக்கும் ஆண், பெண் இருவரையும் நாம் பார்த்து இருப்போம். 70 வயதிற்கு மேல் உழைக்கும் வயதானவர்களை பார்த்தால், நம் மனம் நினைக்கும் ஒரு கேள்வி இந்த வயதிலும் இவர்கள் எப்படி.., இப்படி உழைக்கின்றார்கள் என்பது தான்.
ஆனால் அந்த உழைப்பிற்கு பின்னால் இருக்கும் காரணம் பற்றி.., என்றாவது நாம் சிந்தித்து இருக்கிறோமா..? அப்படி இன்று நான் சந்தித்த பாட்டி தான் “கிளியம்மா”.
வெயிலின் தாக்கம் முடியாமல் என்னிடம் வந்து.., தண்ணீர் வாங்க தர முடியுமா என்று கேட்டார். தண்ணீர் வாங்கி கொடுத்து சற்று நிழல் உள்ள இடத்தில் அவர்களை உட்கார செய்தேன்.
இந்த வெயில் நேரத்தில் ஏன் ? பாட்டி தனியா வரிங்க.., வீட்டில யாரையாவது கூட துணைக்கு கூட்டி கொண்டு வரலாமே என்று கேட்டேன்.
அப்படி கூட்டி கொண்டு வர எனக்கென்று ஒரு உறவும் இல்லை.., என சொல்லி சற்று முகம் வாடினார்.
அவர் அதை கூறிய போது.., அவர் முகம் பசியில் வாடுவதை உணர்ந்தேன், பின் சரி ஏதாவது சாப்பிடுங்க என்று சொல்லி உணவு வாங்கி கொடுத்தேன்.
சாப்பாட்டை கையில் வாங்கியதும், என் ஆசிர்வதித்து ஒன்றை கூறினார். எழு பிள்ளைகளை பெற்றேன், ஒவ்வொருவரையும் படிக்க வைத்து நல்ல நிலைமைக்கு கொண்டு வந்து, திருமணம் செய்து வைத்தேன்.
அவர்களுக்கு என்று ஒரு குடும்பம்.., நல்ல வேலை கிடைத்தும் என்னை வீட்டை விட்டு துரத்தி விட்டார்கள், நான் படிப்பறிவு இல்லாதவள்., ஆனால் எனக்கு என் கணவர் இருக்கும் பொழுது காய்கறி வியாபார வேலைகள் பற்றி சொல்லி கொடுத்தார்.
எனக்கு 15 வயதிலேயே திருமணம் ஆகிவிட்டது, ஆனால் எனக்கு 30 வயது இருக்கும் பொழுது என் கணவர் இறந்து விட்டார். அவர் இறந்த பின் குழந்தைகளுக்காக வீட்டு வேலை, காய்கறி வியாபாரம், இட்லி கடை எல்லாம் போட்டு குழந்தைகளை காப்பாற்றினேன்.
சில ஆண்டுகளுக்கு பிறகு அந்த காய்கறி கடை சூப்பர் மார்கெட், இட்லி கடை ஹோட்டல் என ஆனது, சொத்து என்னிடம் இருந்த வரை என்னை அனைவரும் பார்த்துக்கொண்டார்கள்.
அனைவருக்கும் சொத்தை பிரித்து கொடுத்தும், என்னை தூக்கி எறிந்து விட்டார்கள், பசி வரும் பொழுது கார்ப்பரேஷன் தண்ணீர் கொடுத்து தான் பசியை தீர்த்துக் கொள்வேன்.
நான் பிச்சை எடுத்து, என் வயிற்றை நிரப்பிக் கொள்ளலாம், ஆனால் நான் இதை செய்ய நினைத்திருந்தால், என் கணவர் இறந்த பொழுதே செய்து இருப்பேன்.
என் கணவர் இறக்கும் பொழுது என்னிடம் ஒரேயொரு சத்தியம் வாங்கினார், உன் உயிர் உள்ளவரை நீ உழைத்தே சாப்பிடு என்று சொன்னார்.
நீ கொடுத்த இந்த சாப்பாட்டை கூட என் பேத்தி கொடுப்பதாக, நினைத்துதான் வாங்கினேன். என்று கை கூப்பி நன்றி சொல்லி ஆசிர்வதித்தார்.
இந்த பாட்டியிடம் பேசிய பின் எனக்கு ஒன்றே ஒன்று மட்டும் தான் உணர்ந்தது.., இதேப்போல் வயதானவர்கள் யாரவது இந்த வயதிலும் உழைத்தால், அவர்களிடம் பொருள் வாங்கி உதவுங்கள்.
அல்லது பசி என்று கேட்டால், காசு கொடுப்பதை விட சாப்பிடுவதற்கு ஏதாவது வாங்கி கொடுங்கள்.
மேலும் இதுபோன்ற பல உண்மை கதைகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து இணைந்திடுங்கள்.
-வெ.லோகேஸ்வரி.