13 வயசுலயே நான்..! மன்மதலீலை ஒய்.விஜயா..! ஒரு சின்ன சீக்ரெட்..!!
12 வயதில் சினிமாவில் கால் பதித்து, சினிமா மீது உள்ள காதலால் பல திரைப்படங்களில் காமெடி நடிகையாக, குணச்சித்திர நடிகை மற்றும் வில்லி நடிகையாக நடித்து மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ள ஒய்.விஜயாவை பற்றி நீங்கள் அறியாத பல சுவாரஸ்யங்களை பற்றி படிக்கலாம்.
ஒய்.விஜயா ஆந்திராவில் பிறந்தவர் இவரின் பள்ளி படிப்புகளை கடப்பாவில் படித்து முடித்தார். ஒய்.விஜயாவுடன் பிறந்தவர்கள் மொத்தம் ஒன்பது பேர். ஐந்து சகோதரிகள் மற்றும் நான்கு சகோதரர்கள். சிறு வயதிலேயே நடனத்தில் ஆர்வம் கொண்ட இவர் முறையாக நடனம் கற்றுக்கொண்டார்.
இந்நிலையில் தான் ஒய்.விஜயா தனது 12வது வயதில் பள்ளியில் நடந்த நடன நிகழ்ச்சி கலந்து கொண்ட போது அங்கு சிறப்பு விருந்தினராக வந்த தெலுங்கு இயக்குனர் ஒருவர் அவரை பார்த்து தன்னுடைய படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தார்.
அந்த படம் மூலம் அவர் பிரபலமாகவில்லை என்றாலும், என்டி ராமராவ், ஜெயலலிதா நடித்த “ஸ்ரீ கிருஷ்ண சத்யா” என்ற படத்தில் அவர் முக்கிய கேரக்டரில் நடித்த பின்னரே ஒய்.விஜயா யார் என்பது பலருக்கும் தெரியவந்தது.
அதன் பின் அவருக்கு பல பட வாய்ப்புகள் கிடைத்தது என சொல்லலாம். என்டி ராமராவ், நாகேஸ்வர ராவ் போன்ற பிரபலங்களுடனும் நடித்தார். தமிழில் 1974ம் ஆண்டு சிவாஜி கணேசன், வாணிஸ்ரீ நடித்த “வாணி ராணி” என்ற திரைப்படத்திலும் இவருக்கு முக்கிய கேரக்டர் கொடுக்கப்பட்டது, அந்த படம் விஜயாவுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது என சொல்லலாம்..
தெலுங்கில் கலக்கி கொண்டிருந்த ஒய்.விஜயா தமிழில் முதன் முதலாக நடித்த படம் தான்.., மன்மதலீலை, கே.பாலசந்திரன் இயக்கத்தில் வெளியான இந்த படம் அவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது என சொல்லலாம்.. இந்த படத்திற்கு பின் இவருக்கும் தமிழிலும் ரசிகர்கள் அதிகரிக்க தொடங்கினார்கள் என சொல்லலாம்.
அதன் பிறகு பாலச்சந்தரின் “’மூன்று முடிச்சு” போன்ற பல படங்களில் நடிக்க தொடங்கினார். குணச்சித்திர நடிகை, வில்லி ரோல், மற்றும் ஒரு சில பாடலுக்கு நடனம் என பல திரைப்படங்களில் தொடர்ந்து நடிக்க தொடங்கினார்..
அதிலும் குறிப்பாக கமல்ஹாசன் நடித்த “காக்கிச் சட்டை” படத்தில் வரும் “நம்ம சிங்காரி சரக்கு நல்ல சரக்கு” என்ற பாடலுக்கு நடனம் ஆடி இருப்பார். ஒய்.விஜயாவின் நடனத்தை பார்த்து கமல்ஹாசனே பாராட்டினார் என்பது குறிப்பிடதக்கது.
சினிமாவில் கலக்கி கொண்டிருந்த நடிகை ஒய்.விஜயா கடந்த 1985 ம் ஆண்டு கல்லூரி தாளாளர் அமலநாதன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். மேலும் அவரே அந்த கல்லூரியின் பணிபுரியவும் செய்தார். இவர்களுக்கு அனுஷியா என்ற மகள் உண்டு.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளிலும் நடித்த ஒய்.விஜயா ஒரு கட்டத்தில் தொலைக்காட்சி தொடர்களிலும் நடிக்க ஆரம்பித்தார். குறிப்பாக சன் டிவியில் ஒளிபரப்பான “சின்ன பாப்பா பெரிய பாப்பா” மற்றும் “கல்கி” ஆகிய தொடர்களில் நடித்துள்ளார்.
கடந்து சில ஆண்டுகளுக்கு முன் ஒய்.விஜயா சன் டிவியில் ஒளிபரப்பான “மின்னலே” என்ற தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்போ கூட தனக்கு பிடித்த மாதிரி கதை வந்தால் படம் என்றாலும் சின்னத்திரை என்றால் தான் நடிக்க தயாராக உள்ளதாக ஒய்.விஜயா தெரிவித்துள்ளார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..