“உன்னை கரம் பிடிக்க காத்திருந்தேன்” கவிஞனின் காதலி..!!
“உன்னை முதல் முதலில் காணும் போது காதலில் விழுந்தேனடா
உன்னை பல முறை பார்க்க பார்க்க உன்னை அடைய வேண்டும் என்று நினைத்தேனடா
நீ பேசும் வார்த்தையில் என் சோகத்தை மறந்தேனடா
என் காதலை உன்னிடம் சொல்லும் போது நீ ஏற்றுக்கொள்ளவில்லை ஏனடா
உன்னை கரம் பிடிக்க காத்திருந்தேனடா
பிறகு பல சூழ்நிலைகளால் என்னை விட்டுப் போனது ஏனடா இது நியாயமடா
உனக்காக காத்துக் கொண்டிருந்தேன் நீ வருவாய் என்று தானடா
உன்னை நினைக்கையில் என் மனம் வாடியதடா
உன்னை மறக்கவும் முடியாமல் தவிக்கிறேன் டா
ஆசை யாருக்கும் வரலாம்
ஆனா உன் மீது அளவுக்கு அதிகமாக ஆசைப்பட்டு விட்டேனடா
உன்னை கரம் பிடித்து குழந்தையை போல் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன்
என் ஆசை அழிந்து போனதடா
அடுத்த ஜென்மத்தில் உன்னை கரம் பிடிக்கும்
கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன் டா…
– கௌசல்யா
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..