இசையமைப்பாளர் அனிருத்தை நான் கடத்துவேன்..!! ஒப்பு கொண்ட விஜய் தேவர்கொண்டா..!!
நடிகர் விஜய் தேவர் கொண்டா மற்றும் சமந்தா இணைந்து நடித்து வருகிற செப்டம்பர் மாதம் வெளியாக உள்ள படம் தான்.., “குஷி” தெலுங்கு படத்தை தமிழில் டப்பிங் செய்து திரையில் ஒளிபரப்பு செய்தாலும்.., நெட்டிஸைன்கள் அலைபாயுதே 2 ரீமேக் என கமெண்ட் செய்து வருகின்றனர்.
அதிலும் குஷி இசை வெளியீட்டு விழாவில் விஜய் தேவர்கொண்ட அணிந்திருந்த அந்த உடை பற்றியும் பலரும் கமெண்ட் செய்து வந்தனர்.., முக்கியமாக மீம் கிரியேட்டர்கள் விஜய் தேவர்கொண்டாவின் போட்டைவையும்.., கில்லி விஜயின் போட்டோவையும் வைத்து மீம் போட்டு காலயத்தனர்..,
இந்நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவரிடம்.., உங்களின் படங்கள் தொடர் தோல்வி அடைந்து வருகிறதே அதற்கு காரணம் என்ன இந்த படம் மட்டும் எப்படி வெற்றி பெரும் என நீங்கள் நினைக்கிறீர்கள் என கேட்டுள்ளனர்.
அதற்கு பதில் கூறிய விஜய் தேவர்கொண்டா, சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஆறு படங்களும் தோல்வி தான்.., ஆனால் ஜெயிலர் 500 கோடி வசூல் அள்ளி வெற்றி படைக்கவில்லையா..? சூப்பர் ஸ்டாருக்கு ஒரு ஜெயிலர்.., கமலுக்கு ஒரு விக்ரம்.., தமிழில் எனக்கு நிறைய நடிகர்கள் மற்றும் இசையமைப்பாளர்களை பிடிக்கும் இருந்தும் தமிழ்நாட்டில் இருந்து ஒருவரை கடத்த வேண்டும் என்றால் “அனிருத்” மட்டுமே நான் கடத்தி செல்வேன்.
இந்த படத்தில் பெயரில் மட்டும் குஷி இருக்காது.., படம் பார்க்கும் அனைவருக்கும் குஷியாக இருக்கும் என நடிகர் விஜய் தேவர்கொண்டா செய்தியாளர்கள் முன் பேசினார்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..