உலகின் மிக பெரிய பணக்காரர்களின் ஒருவரான எலன் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய முதலே பல அதிரடி நடவடிக்கைகளால் உலகையே ஆச்சர்யபடுத்தி வருகிறார். தற்போது ட்விட்டர் நிறுவனத்தின் சி.இ.ஓ பதவிக்கு ஒரு முட்டாளை கண்டுபிபிடித்துவிட்டு அந்த பதவியிலிருந்து விலக இருப்பதாக அறிவித்துள்ளார்.
I will resign as CEO as soon as I find someone foolish enough to take the job! After that, I will just run the software & servers teams.
— Elon Musk (@elonmusk) December 21, 2022
ட்விட்டர் நிறுவனத்தை மிக பெரிய தொகைக்கு வாங்கிய முதல் அந்த நிறுவனத்தில் பல அதிரடி முடிவுகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு தான் ட்விட்டர் நிறுவனத்தின் சி.இ.ஓ பதவியிலிருந்து விலக வேண்டுமா என்றும் அதற்கு கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தினார். அந்த கருத்துக்கணிப்பிற்கு உலகம் முழுவதும் 17,502,391 வாக்குகள் பதிவானது. அதில் 57.5% அவர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்றும் 42.5% அவர் ட்விட்டர் நிறுவனத்தில் அதே பதவியில் நீடிக்க வேண்டும் என்றும் வாக்களித்துள்ளனர்.
இதற்கு பதிலளித்துள்ள எலன் மஸ்க், யாரையாவது முட்டாள்தனமாகப் கிடைத்தால் அவரை நியமித்துவிட்டு , நான் CEO பதவியை ராஜினாமா செய்வேன்! அதன் பிறகு, நான் மென்பொருள் மற்றும் சேவையக குழுக்களை இயக்குவேன் என்று அவர் தெரிவித்துள்ளார். இதே போன்று கருத்துக்கணிப்பு நடத்தியே அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் உடைய ட்விட்டேர் கணக்கை மீண்டும் கொண்டுவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.