February 27, 2020
Madhimugam
Exclusive Today Trending விளையாட்டு

மோதலில் ஈடுபட்ட இந்திய, வங்கதேச வீரர்கள் மீது ஐசிசி நடவடிக்கை

ஜூனியர் உலகக் கோப்பை இறுதிப் போட்டியின்போது மோதலில் ஈடுபட்ட வங்கதேச, இந்திய வீரர்கள் 5 பேர் மீது ஐசிசி நடவடிக்கை எடுத்துள்ளது.

தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற ஜூனியர் உலகக் கோப்பை போட்டிகள் முடிவுக்கு வந்தன. இதில் இந்தியாவுடன் மோதிய இறுதி ஆட்டத்தில் டிஎல்எஸ் முறையில் 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற வங்கதேசம், முதன்முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. வங்கதேச பந்துவீச்சாளா்கள் தொடக்கம் முதலே இந்திய பேட்ஸ்மேன்களை வெறுப்பேற்றும் வகையில் செயல்பட்டனா். ஷோரிபுல் இஸ்லாம், டன்ஸிம் ஹாசன் இருவரும் சிறப்பாக பந்துவீசிய போதிலும், இந்திய வீரா்களை நோக்கி தரக்குறைவாக பேசியுள்ளனா்.

வங்கதேச வீரா் ரஹிப்புல் ஹாசன் வெற்றி ரன்களை அடித்த நிலையில், உணா்ச்சிவசப்பட்ட அந்த அணி வீரா்கள், சோகத்தில் இருந்த இந்திய வீரா்களிடம் தரக்குறைவாக நடந்து கொண்டனா். இதனால் இந்திய வீரா்களும் மைதானத்தில் களமிறங்கி மோதலில் ஈடுபடும் சூழல் ஏற்பட்டது. இதையடுத்து நடுவா்கள் தலையிட்டு இரு தரப்பையும் சமாதானப்படுத்தினர். இந்நிலையில், வங்கதேச வீரா்கள் ரஹிப்புல் ஹாசன், ஷமிம் ஹுசைன், முஹம்மது தவ்ஹித் ருதோய் ஆகியோர் மீதும், இந்திய வீரர்கள் ஆகாஷ் சிங், ரவி பிஷோனி ஆகிய இருவரும் மீதும் விதிகளை மீறியதாக ஐசிசி குற்றம்சாட்டியுள்ளது. இரு அணிகளைச் சேர்ந்த மொத்தம் ஐந்து பேர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்து ஐசிசி நடவடிக்கை எடுத்துள்ளது.

Related posts

வீதிக்கு வாங்க ரஜினி – கலாய்க்கும் நெட்டிசன்கள்

Digital Team

“ஆண்டவனே தவறு செய்தாலும் தவறுதான், விஜய் விவகாரத்தில் தலையிட மாட்டோம்” – செல்லூர் ராஜூ

Digital Team

லைகா நிறுவனத்திற்கு கமலஹாசன் கடிதம்…!

superadmin

கிருஷ்ணகிரியில் களை கட்டிய எருது விடும் போட்டி

Digital Team

நடிகர் விஜய்யிடம் பறிமுதல் ஆவணங்கள் அமலாக்கத்துறையிடம் ஒப்படைப்பு !

superadmin

சச்சின் தெண்டுல்கருக்கு லாரியஸ் விருது

Digital Team
You cannot copy content of this page
Madhimugam