ஓபிஎஸ்க்கு கண்டனம் விடுத்த ஐகோர்ட்..!!
ஆட்சி மாற்றத்திற்கு ஏற்ப லஞ்ச ஒழிப்புதுறை அதிகாரிகள் பச்சோந்தியை போல நிறம் மாறுவதாக ஐகோர்ட் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் இருந்து ஓபிஎஸ் விடுவிக்கப்பட்டது குறித்து ஐகோர்ட் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறார்.
சொத்து குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட ஓபிஎஸ்-ஐ 2012 ம் ஆண்டு அந்த வழக்கில் இருந்து சிவகங்கை நீதிமன்றம் விடுதலை செய்தது. 2001 முதல் 2006 வரை நடைபெற்ற அதிமுக ஆட்சியில் வருமானத்திற்கு அதிகமாக ரூ.1.77 கோடி சொத்து சேர்த்த குற்றத்திற்காக ஓபிஎஸ் மீது வழக்கு தொடரப்பட்டது. ஓபிஎஸ் விடுவிக்கப்பட்ட நிலையில் வழக்கை மீண்டும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்து வருகிறார்.
இந்த சட்டம் எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு பொருந்தாது என அறிவித்து விடலாமே என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார். எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை பின்பற்ற வேண்டும். லஞ்ச ஒழிப்புத்துறை அரசிடம் இருந்து விலகி செயல்பட வேண்டும் எனவும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறினார்.
இதுபோன்ற தவறுகளுக்கு நாம் அனுமதிப்பதால் தான் பல தவறுகள் நடக்கிறது.., சபாநாயக்கர் நீதிபதி போல செயல்பட்டு இருப்பது குறித்தும் ஓ.பன்னீர் செல்வம் விடுவிக்கப்பட்டது குறித்தும் லஞ்ச ஒழிப்புதுறைக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஓ.பன்னீர்செல்வம் விடுவிக்கப்பட்டது தொடர்பாக பதில் அளிக்ககோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..