சுவையான பன்னீர் கேப்ஸிகம் சப்பாத்தி இன்னிக்கு வீட்ல செய்ங்க…
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு-1 கப்.
உப்பு- 1 சிட்டிகை.
எண்ணெய்- சிறிதளவு.
ஸ்டப்பிங் செய்வதற்கு,
பன்னீர்-1கப்.
கேப்ஸிகம்-1 கப்.
வெங்காயம்-1 கப்.
பச்சை மிளகாய்- 1
கொத்தமல்லி -1/2 கப்.
மிளகாய் தூள்-1 தேக்கரண்டி.
சீரகத்தூள்-1 தேக்கரண்டி.
சாட் மசாலா-1 தேக்கரண்டி.
உப்பு- தேவையான அளவு.
நெய்- தேவையான அளவு.
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, உப்பு மற்றும் சிறிது எண்ணெய் சேர்த்து நீர் விட்டு நன்றாக பிசைந்து சப்பாத்தி மாவு பதத்திற்கு தயார் செய்ய வேண்டும்.
மற்றொரு பாத்திரத்தில் துருவிய பன்னீர், கேப்ஸிகம், வெங்காயம், மிளகாய், கொத்தமல்லி ஆகியவற்றை நறுக்கி கொண்டு அத்துடன் உப்பு, மிளகாய்த்தூள், சீரகத்தூள், சாட் மசாலா ஆகியவற்றை எல்லாம் சேர்த்து நன்றாக பிசைந்துக் கொள்ளவும்.
சப்பாத்தி மாவில் ஒரு உருண்டையை எடுத்து தேய்த்து அதன் நடுவில் தயாரித்து வைத்திருக்கும் ஸ்டப்பிங்கை வைத்து நான்கு பக்கமும் மூடி பின் அதை சப்பாத்தி போல தேய்த்து எடுக்க வேண்டும்.
அடுப்பில் சப்பாத்தி கல்லை வைத்து சப்பாத்தியை போட்டு நெய் விட்டு இரண்டு பக்கமும் வேக வைத்து எடுக்க வேண்டும்.
அவ்வளவு தான் சுவையான பன்னீர் கேப்ஸிகம் சப்பாத்தி தயார். சிறு குழந்தைகளின் லஞ்ச் பாக்ஸ்க்கு ஏற்றதாக இருக்கும்.