“சித்தாந்தங்கள் பிரிவினையை ஆதரிக்கும்..” சர்ச்சையான ஆளுநர் ரவி பேச்சு..!!
போதையில் இருந்து நமது இளைஞர்களை நாம் காப்பாற்ற வேண்டும் என சுதந்திர தின வாழ்த்து செய்தியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி வெளியிட்டுள்ள சுதந்திர தின விழா வாழ்த்து செய்தியில், தமிழ்நாட்டின் சகோதர, சகோதரிகளே, நமது சுதந்திரத்தின் 78வது ஆண்டு விழாவை முன்னிட்டு, உங்கள் அனைவருக்கும் தனது அன்பான மற்றும் சிறப்பான நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்..
நமது சமூகத்தில் குறிப்பாக நமது இளைஞர்களிடையே அதிகரித்து வரும் போதைப்பொருள் மற்றும் போதைப் பொருட்களின் பரவலால் தாம் மிகவும் கவலை அடைந்துள்ளதாகவும் போதைக்கு எதிராக எப்போதும் விழிப்புடன் இருப்பது நம் அனைவரின் கூட்டுப் பொறுப்பு எனவும் தெரிவித்துள்ளார்.
நமது தேசிய மகிழ்ச்சித் திருவிழாவான நமது சுதந்திர தினத்தை முழு பூரிப்புடனும் உற்சாகத்துடனும் ஒவ்வொரு வீட்டிலும் கட்டடத்திலும் நமது மூவர்ணக் கொடியை ஏற்றிக் கொண்டாடுவோம் எனவும் ஆளுநர் கூறியுள்ளார்.
ஆனால் நேற்று சென்னை ஐஐடி மற்றும்ஆளுநர் மாளிகை சார்பில், தேசப்பிரிவினை கொடூரங்களின் நினைவு தினம் தரமணியில் உள்ள ஐஐடி ஆராய்ச்சி பூங்காகூட்டரங்கில் நடைபெற்றது.. அதில் பங்கேற்று பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது..
அதாவது “வரலாற்று அடிப்படையில் கடந்த காலத்தை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும். பாரதம் வன்முறை நாடாக்கப்பட்டு, பல கொடூரங்கள், நாட்டுபிரிவினையால் நடந்தன. நமது நாட்டில் பல சித்தாந்தங்கள் பிரிவினையை ஆதரித்தன. அதில், திராவிட சித்தாந்தமும் ஒன்று என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.
தற்போதும் நடக்கிறது. இருப்பிடம், மொழி ஆகியவற்றின் மூலம் மக்கள் மனதில் பிரிவினையை உண்டாக்குகின்றனர். பல சித்தாந்தங்கள் பிரிவினையை ஆதரித்தன. அதில் திராவிட சித்தாந்தமும் ஒன்று. முன்பு இந்தியாவை ஆண்ட அரசு நமது நிலத்தை ஆக்கிரமித்த அண்டை நாடுகளுக்கு தாரைவார்த்தது. 1960 போரில் இந்திய இடத்தை சீனாவிடம் தாரைவார்த்தனர். அதேபோல் கச்சத்தீவையும் தாரைவார்த்தனர். இதனால் நமது மீனவர்கள் அண்டை நாடு ராணுவத்தால் சுடப்படுகிறார்கள்” என இவ்வாறே ஆளுநர் ரவி பேசியுள்ளார்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..