’80 வயதுக்கு மேல் உள்ளவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டால் சாகட்டும்’ அரசு அதிரடி முடிவு?

80 வயதுக்கு மேல் உள்ளவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டால் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்க வேண்டாமென்று இத்தால் அரசு முடிவு.

கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கையில் சீனாவுக்கு அடுத்த இருக்கும் நாடு என்றால் அது இத்தாலி தான். அந்நாட்டில் இதுவரை கொரோனா வைரஸால் 1,809 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 368 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 24,747 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

அங்குள்ள மருத்துவமனைகளும், மருத்துவக் குழுவும், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க முடியாமல் திணறி வருகிறது.

இந்த நிலையில், இத்தாலியின் பேரிடர் மேலாண்மை அமைப்பு “மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் போதுமான படுக்கைகள் இல்லாததால் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக வரும் 80 வயதுக்கு மேற்பட்டோரையும், உடல்நிலை மிகவும் மோசமடைந்து வருபவர்களையும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்க வேண்டாம்” என்று அறிவுறுத்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதன் மறைமுக அர்த்தம் என்னவெனில் 80 வயதுக்கு மேற்பட்டோரையும், மிகவும் கவலைக்கிடமாக இருப்போரையும் காப்பாற்றுவதற்காக மருத்துவர்கள் தீவிர கவனம் செலுத்த வேண்டாம் எனவும் அவர்களை இறக்க விட்டுவிடலாம் என்றும் சொல்லப்படுகிறது.

மேலும், தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற வரும் நோயாளிகள் 80 வயதுக்குள் இருப்பவராகவும், உடலில் ஏற்கனவே 5க்கும் குறைவான பிரச்னைகள் இருந்தால் மட்டுமே அவர்களை அனுமதிக்கும் வகையில் புதிய கட்டுப்பாடு விதிகளை கொண்டு வரவும் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

What do you think?

-1 points
Upvote Downvote

‘திடீரென உயர்ந்த தங்கத்தின் விலை’ பொதுமக்கள் அதிர்ச்சி!

‘பொதுச் செயலாளர் பதவிக்கான போட்டி’ பொருளாளர் பதவியிலிருந்து துரைமுருகன் விலகல்!