நவரத்தின பகோடா..ஈவினிங் ஸ்நாக்ஸ்..!
தேவையான பொருட்கள்:
வெங்காயம் ஒன்று
இஞ்சி ஒரு துண்டு
பச்சை மிளகாய் மூன்று
உருளைக்கிழங்கு ஒன்று
கேரட் ஒன்று
கத்தரிக்காய் மூன்று
கீரை 50 கிராம்
அரிசி மாவு அரை கப்
கடலை மாவு இரண்டு கப்
சோடா மாவு கால் ஸ்பூன்
மிளகாய்த்தூள் இரண்டு ஸ்பூன்
கறிவேப்பிலை சிறிது
கொத்தமல்லி இலை 3 ஸ்பூன்
தயிர் மூன்று ஸ்பூன்
சர்க்கரை ஒரு ஸ்பூன்
ஆரஞ்சு கலர் பவுடர்
எண்ணெய் தேவையாது
தண்ணீர் தேவையான அளவு
செய்றை:
முதலில் காய்கறிகளை சின்ன சின்னதாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
அரிசி மாவு மற்றும் கடலை மாவை சுத்தமாக சலித்துக் கொள்ளவும்.
ஒரு அகலமான பாத்திரத்தில் நறுக்கிய காய்கறிகள், அரிசி மாவு, கடலை மாவு, சோடா மாவு, சர்க்கரை, மிளகாய்த்தூள், கலர் பவுடர், தயிர், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக பிசைந்துக் கொள்ள வேண்டும்.
ரொம்ப கட்டியாக இருந்தால் சிறிது தண்ணீர் விட்டு பிசைந்துக் கொள்ளவும்.
ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் சிறிது சிறிதாக எடுத்துப்போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
அவ்வளவுதான் நவரத்தின பகோடா தயார். இத்துடன் தக்காளி சாஸ், தேங்காய் சட்னி தொட்டு சாப்பிட சுவையாக இருக்கும்