பொன்முடியின் சொத்துகளை மீண்டும் முடக்க வேண்டியதில்லை
பொன்முடியின் சொத்துகளை மீண்டும் முடக்க வேண்டிய அவசியமில்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2006 முதல் 2011 ஆம் ஆண்டுகளில் அமைச்சராக இருந்த பொன்முடி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 2011ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்து அவரது சொத்துகளையும் முடக்கியது.
இதையடுத்து, 2016 ஆம் ஆண்டு இது தொடர்பான வழக்கில் இருந்து பொன்முடியை விடுதலை செய்த விழுப்புரம் நீதிமன்றம், அவரது சொத்துகள் முடக்கத்தையும் நீக்கியது
இதனை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த வழக்கில் பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த, உயர் நீதிமன்ற நீதிபதி உத்தவிட்டார்.
இதையடுத்து, சொத்துகளை முடக்கக்கோரிய மனு மீது இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஜெயச்சந்திரன், சிறப்பு நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட சொத்துக்களை தற்போதைய சூழலில் மீண்டும் முடக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், தேவைப்பட்டால் சட்டத்திற்கு உட்பட்டு லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்” என தீர்ப்பளித்துள்ளார்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.