கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் சென்னையில் போராட்டம் நடக்கும்..! கோபத்தின் உச்சத்தில் கட்டுமான தொழிலாளர்கள்..!!
வேலூர் மாவட்டம், வேலூரில் அகில இந்திய கட்டுமான அமிப்புசாரா தொழிலாளர் நலசங்கத்தின் செயற்குழு கூட்டம் நிறுவன தலைவர் ஆர்.டி.பழனி தலைமையில் நடைபெற்றது இதில் பொதுசெயலாளர் கார்த்திகேயன் செயலாளர் உமாசங்கர் உள்ளிட்ட திரளான நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இந்த செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து ஆர்.டி.பழனி செய்தியாளர்களிடம் கூறுகையில் கட்டுமானத்திற்கு தேவையான மணல் ஒரு யூனிட் ரூ.5 ஆயிரமாக உள்ளது அதனை அரசு கட்டுபடுத்தி ஒரு யூனிட் 1000 ரூபாய்க்கு வழங்க வேண்டும்.
மேலும் சிமெண்ட் கம்பி செங்கல் விலைவாசி உயர்வை கட்டுபடுத்தி கட்டுமான தொழிலுக்கு உதவிடவும் ஏரி குளங்களில் இலவசமாக மண் எடுக்க அனுமதி வழங்க வேண்டும், கட்டுமான நலவாரியத்தில் அறிவிப்புகள் எல்லாம் அப்படியே முடங்கி போய்வுள்ளது சரியாக செயல்படவில்லை எனவே உடனே இதனை செயல்பட வைக்க வேண்டும் தற்போது ரூ.1000 வழங்கும் ஓய்வூதியத்தை ரூ.5 ஆயிரமாக உயர்த்த வேண்டும் விபத்து மரணம் ரூ,10 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும்.
டாஸ்மாக் அமைச்சர் கட்டுமான தொழிலாளர்கள் காலையிலேயே மது அருந்த கோரிக்கை வைத்தனர் என கூறுவது எங்களை கேவலப்படுத்தும் வகையில் உள்ளது காலை குடித்துவிட்டால் எப்படி வேலை செய்வது விபத்தில் தான் சாகாக வேண்டும் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவருக்கு கூட 10 லட்சம் நிதியை அரசு அளிக்கிறது ஆனால் கட்டுமான தொழிலாளர்கள் இறந்த ஆயிரம் காரணங்களை சொல்லி பணம் தர அரசு மறுக்கிறது.
எங்கள் கோரிக்கை ஒரு மாத காலத்திற்குள்ளாக நிறைவேற்றவில்லை என்றால் சென்னையில் முதற்கட்டமாக உண்ணாவிரதமும் அடுத்தகட்டமாக மாவட்ட தலைநகரங்களில் போராட்டங்களையும் கட்டுமான தொழிலாளர்கள் நடத்துவோம் நலவாரியத்திற்காக பல ஆயிரம் கோடி பணம் அரசிடம் உள்ளதால் கட்டுமான தொழிலாளர்களுக்கு தனி வங்கி ஒன்றை அரசு துவங்க வேண்டும் என்று கூறினார்.