நாய் கடித்துவிட்டால் ரேபிஸ் வைரஸ் தாக்காமல் இருக்க இத செய்யுங்க…!
-
நாய் கடித்ததும் நாம் முதலில் முதலில் மருத்துவமனை செல்வதற்கு முன் சில முதலுதவிகளை வீட்டிலேயே செய்ய வேண்டும். இதனால் ரேபிஸ் தொற்று 80 சதவீததை அழிக்கலாம்.
-
நாய் கடித்துவிட்டதென்றால் உடனே அருகில் உள்ள குழாயில் தண்ணீரை வேகமாக திறந்துவிட்டு நாய் கடித்த இடத்தில் அப்படியே தண்ணீரில் இரண்டு நிமிடத்திற்கு வைக்க வேண்டும். பின் சோப்பை அந்த இடத்தில் தடவி நன்றாக தண்ணீரை அடிக்க வேண்டும்.
-
மேலும் அந்த இடத்தில் டெட்டால் ஆகியவற்றை போட்டும் நன்றாக கழுவ வேண்டும். இதனால் 80 சதவீதம் ரேபிஸ் வைரஸ் அழிந்துவிடும்.
-
ஒரு மணி நேரத்திற்குள் மருத்துவமனைக்கு சென்று முதல் டோஸ் ரேபிஸ் தடுப்பூசியை போட்டுக் கொள்ள வேண்டும். மருத்துவமனைக்கு சென்று முதல் டோஸை எவ்வளவு சீக்கிரம் எடுக்கிறோமோ அந்த அளவிற்கு ரேபிஸ் வைரஸை நாம் அழிக்கலாம்.
-
அடுத்த நாட்களில் மருத்துவர் கூறும்படி மருத்துவமனைக்கு சென்று மீதமுள்ள டோஸ்களை எடுத்துக் கொள்ள வேண்டும். பொதுவாக நாய் கடிக் காயம் காற்றோட்டமாக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.