இல்லத்தரசிகளுக்கு கண்டிப்பாக இது பயன்படும்..!
துணிகளில் படியும் தீக்கறையை அகற்ற ஒரு வெங்காயம் கொண்டு தேய்த்துவிட்டு பின் வழக்கம் போல துவைக்கலாம்.
மாங்காய் ஊறுகாயில் காரம் உப்பு போடுவதற்கு முன் அதில் சிறிது விளக்கெண்ணெய் சேர்த்து கலந்து விட்டு பின் உப்பு மற்றும் காரம் சேர்க்கலாம்.
சீக்கிரம் வேக வேண்டும் என்பதற்காக சோடா உப்பு சேர்க்கப்படுகிறது இதனால் உணவுகளில் சத்துக்கள் அழிந்து உடலுக்கும் தீங்கு விளைவிக்கிறது.
ரசம், சாம்பாரில் உப்பு அதிகமாகிவிட்டால் கவலை வேண்டாம் ஒரு உருளைக்கிழங்கை நறுக்கி போட்டு கொதிக்கவைத்தால் உப்பு சரியாகிவிடும்.
வெற்றிலையை காம்பு கிள்ளி மாவில் போட்டுவைத்தால் மாவு புளிப்பு ஏறாது.
சில்வர் டப்பாவில் துருக்கறை இருந்தால் சோப்பு நீரில் சிறிது மண்ணெண்ணெய் கலந்து தேய்க்க கறை நீங்கிவிடும்.
இட்லிக்கு அரிசி ஊறவைக்கும்போது அதனுடன் கைப்பிடி அவல் சேர்த்து ஊறவைத்து அரைத்து இட்லி சுட்டால் மென்மையாக இருக்கும்.
உருளைக்கிழங்கு வறுவல் மொறுமொறுவென இருக்க அதன் மேல் பயித்தம் பருப்பு மாவை தூவி பொரித்து எடுத்தால் சுவை அருமையாக இருக்கும்.
அரிசி வத்தல் போடும்போது அதில் சிறிது பால் ஊற்றி செய்தால் வத்தல் நன்றாக வெள்ளையாக இருக்கும்.
தேநீர் போட்டதும் வடிகட்டிய அந்த தூளை சிறிது நீரில் கொதிக்கவைத்து அதனை மரக்கதவு மற்றும் ஜன்னல்களில் துடைத்தால் பளிச்சென இருக்கும்.