புளித்த இட்லி மாவு இருந்தா..! இந்த ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க…!!
நமது வீட்டில் இருப்போர் மாலை வேளையில் ஸ்னாக்ஸ் கேட்பது வழக்கம் தான் அப்படி இருக்கையில் எப்போதும் கடலை மாவு கொண்டு செய்யப்படும் பஜ்ஜி போண்டா சாப்பிட்டு போர் அடித்த நிலையில் ஒரு புதுவித போண்டா ரெசிபி எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்
போண்டா செய்வதற்கு தேவையான பொருட்கள் :
- அரிசி மாவு ஒரு டேபிள் ஸ்பூன்,
- ரவை 2 டேபிள் ஸ்பூன்
- வரமிளகாய் ( சுடுநீரில் 10 நிமிடங்கள் ஊற வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும் )
- மூன்று புளித்த இட்லி மாவு ஒரு கப் பொடியாக நறுக்கிய வெங்காயம் ஒன்று
- கருவேப்பிலை ஒரு கொத்து
- பூண்டு மூன்று பல்
- சீரகம் கால் டீஸ்பூன்
- கொத்தமல்லி சிறிதளவு
- எண்ணெய் தேவையான அளவு
- ஒரு பாத்திரத்தில் நாம் எடுத்து வைத்துள்ள குளித்த கிளி மாவை போட்டு அதில் அரிசி மாவு மற்றும் ரவையை சேர்த்து நன்கு ஒரு சேர பிசைந்து கொள்ளவும்.
இந்த கலவையை குறைந்த பட்சம் ஒரு 10 நிமிடங்கள் அப்படியே மூடி போட்டு ஊற விடுங்கள்.
அடுத்து நாம் பத்து நிமிடங்கள் சுடுநீரில் ஊற வைத்து எடுத்து வர மிளகாய் மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன் பூண்டு பற்களையும் போட்டு நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து நாம் கலந்து வைத்துள்ள மாவில் இந்த மிளகாய் மற்றும் பூண்டின் விழுதை சேர்த்து நன்கு கலக்க வேண்டும்… பின்னர் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் கறிவேப்பிலை கொத்தமல்லி சீரகம் தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி நன்கு சூடாக்கி கொள்ளவும். என்னை நன்கு கொதிக்கும் பதத்திற்கு வந்ததும் நாம் பிசைந்து வைத்துள்ள மாவை கையில் எடுத்து சிறு சிறு துண்டுகளாக கையில் எடுத்து எண்ணெயில் போடவும் அது வந்து நன்கு பொன்னிறமாக மாறிய பின்னர் எடுக்கவும்.
அவ்வளவுதான் சுவையான கார போண்டா தயார் இதனை மாலை வேலையில் டீயுடன் சேர்த்து சாப்பிடுவது அவ்வளவு ஒரு டேஸ்ட் கொடுக்கும்.
இந்த ரெசிபி ட்ரை பண்ணி பாத்துட்டு எப்படி இருந்தது என்று கருத்தை பதிவிடுங்கள்