முதல்வரின் ஊரான திருவாரூரிலேயே மின்சாரம் இல்லை என்றால் வேறு எந்த ஊரில் மின்சாரம் இருக்கும்..? தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி..?
முதல்வரின் ஊரான திருவாரூரிலேயே மின்சாரம் இல்லை என்றால் வேறு எந்த ஊரில் மின்சாரம் இருக்கும்..? என தெலுங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி மாநில துணை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி.
திருவாரூரில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் தெலுங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநருமான “தமிழிசை சௌந்தர்ராஜன்” கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட “தமிழிசை செளந்தர்ராஜன்” நிகழ்ச்சியில் பேசிக்கொண்டு இருக்கும் பொழுது அடிக்கடி மின்வெட்டு துண்டிக்படுள்ளது.
இதனால் நிகழ்ச்சியில் சற்று சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் நாளைய தினம் புதுவையில் 77,000 மகளிருக்கு, மாதம் 1000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது. 50,000 பெண் குழந்தைகளுக்கு பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம், மேலும் கேஸ் மானியமாக 300 ரூபாய் வழங்கப்பட உள்ளது.
தமிழகத்தில் அதிகமாக அறிவித்து பின் குறைத்து வழங்குவது போல் அல்லாமல் புதுவையில் குறைத்து அறிவித்து அதிகமான பயனாளிகளுக்கு தொகை வழங்கப்பட உள்ளது. புதுவை மாடல் மிகச் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது.
தமிழகத்தில் அடிக்கடி எதன் காரணமாக மின்வெட்டு ஏற்படுகிறது, என்று தெரியவில்லை. தற்பொழுது நான் கலந்து கொண்ட நிகழ்ச்சியிலேயே பலமுறை மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. ஒருவேளை புதிய அமைச்சர் பொறுப்பேற்றதனால் இது போன்று ஏற்படுகிறதோ..? வாய்ப்புகள் இருக்கலாம், முதலமைச்சரின் ஊரான திருவாரூரிலேயே மின்சாரம் இல்லை என்றால் எந்த ஊரில் மின்சாரம் இருக்கும் என எனக்கு தெரியவில்லை.
ஆளுநர் தமிழிசை செய்தியாளர் சந்திப்பின் போதும் மின்வெட்டு ஏற்பட்டதால் செய்தியாளர் சந்திப்பில் சிரிப்பலை நிலவியது. இந்நிகழ்ச்சியில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், அதிமுக முன்னாள் அமைச்சர் இரா.காமராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..